Pandian Stores Baakiyalakshmi Serial Magasangamam Episode : நிச்சயத்தில் ஐஸ்வர்யா பிரசாந்திற்கு மோதிரம் அணிவிக்காமல் நிற்பதை பார்த்து அனைவரும் கூச்சபடாம போட்டு விடமா என சொல்ல, வேறு வழியில்லாமல் மோதிரம் போட்டு விடுகிறாள் ஐஸ்வர்யா. இதனையடுத்து இரு வீட்டாரும் தட்டை மாத்தி கொண்பின், எழிலை சந்திக்கும் ஜெனி இனியா இரவரும், ஐஸ்வர்யா கண்ணனை விரும்புவதை பற்றி சொல்கிறார்கள்.
இதை கேட்ட எழில் இப்போதைக்கு நிச்சயம் நடந்து முடியட்டும் அதன்பின்ன இருவரும் சந்தித்து பேச வைத்து, ஒருவருக்கொருவர் பிடிச்சு இருக்குறதை தெரிஞ்சுக்க வைக்கணும் என முடிவு செய்கின்றனர். அதேபோல், அதன்பின்னர் கண்ணனையும், ஐஸ்வர்யாவையும் ஒரு அறையில் பூட்டி வைத்து பேச வைக்கின்றனர். அப்போது ஐஸ்வர்யா, அவள் என் நிச்சயத்துல உன்னால சந்தோஷமா கலந்துக்க முடியுதுல. அப்புறம் எதுக்கு என்னை டெய்லி காலேஜ் கூட்டிட்டு போன. எனக்காக வீட்ல பணம் திருடி பீஸ் கட்டுன என கேட்கிறாள்.
அதற்கு கண்ணன், எனக்கு உன்னை பிடிச்சது அதுனால தான் இதெல்லாம் பண்ணேன் என சொல்ல நான் பிரசாந்த் கிட்ட பேசும் போது எல்லாம் உனக்கு அவ்வளவு கோபம் வரும். அதெல்லாம் பார்க்கும் போது நம்ம கண்ணன் மாமாவுக்கு என்மேல அவ்வளவு ஆசையான்னு தோணும். பிரசாந்தை பிடிக்கலன்னு சித்திகிட்ட சொன்னா என்னை அடிக்கிறாங்க. வீட்ல இருக்க மத்தவங்ககிட்ட சொல்லலாம்னு பார்த்தா, உனக்கு என்னை பிடிச்சு இருக்கா இல்லையான்னு தெரியலை என சொல்கிறாள்.
அதற்கு கண்ணனும் நம்மா ஐசுக்கு எப்படி அந்த பிரசாந்தை பிடிச்சு இருக்குன்னு யோசிச்சு யோசிச்சு செத்துட்டு இருக்கேன் என சொல்லும்போது, ஐஸ்வர்யா எனக்கு அந்த பிரசாந்தை பிடிக்கலை மாமா. உன்னை தான் பிடிச்சு இருக்கு என சொல்லி அழுகிறாள். இதற்கிடையில் மல்லியும், பிரசாந்தும் கோபியிடம் நிச்சயத்தை நல்லபடியாக நடத்தி வைத்ததுக்கு நன்றி செப்டம்பர் மாதம் கல்யாணம் வைச்சு இருக்கோம். கண்டிப்பா நீங்க ஒரு மாசத்துக்கு முன்னாடியே வந்துடனும் என சொல்கிறார்கள்.
நடக்காத கல்யாணத்துக்கு இவ்வளவு திட்டம் போடுறாங்களே என எழில் யோசிக்கிறான். அதன்பிறகு பிரசாந்திடம் உண்மையை சொல்ல நினைக்கும் எழில், அவனை தனியாக சென்று, ஒரு வேளை ஐஸ்வர்யாவுக்கு உங்கள பிடிக்கலன்னா என்ன பண்ணுவீங்க என கேட்கிறான். அதற்குபிரஷாந்த் அதுக்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பிடிக்கலன்னாலும் அவ என்னை தான் கல்யாணம் பண்ணனும் என சொல்கிறான். அப்போது அங்கு வரும் பாக்யா வந்து ஊருக்கு கிளம்பனும் என சொல்லி எழிலை அழைத்து செல்கிறாள்.
இதற்கிடையில் கண்ணனிடம் பேசும் ஐஸ்வர்யா, எனக்கு உன்னை தான் பிடிச்சு இருக்கு மாமா. உன் கூடவே இருக்கணும் தோணுச்சு என சொல்கிறாள். அப்போது கண்ணன் தன் காதலை சொல்ல ஐஸ்வர்யாவும் லவ் யூ மாமா என அவனை கட்டி பிடிக்கிறாள். அப்போது முல்லை அங்கு வர இருவரும் காலேஜ் பற்றி பேசுவதாக சொல்லி சமாளிக்கின்றனர். அதன்பின்னர் குன்னக்குடிக்கு வா. நம்ம பேசிக்கலாம். என கண்ணன் சொல்லிவிட்டு செல்கிறான்.
அதனை தொடர்ந்து எழில், இனியா, ஜெனி மூவரிடமும் நீங்க பண்ணதை மறக்கவே முடியாது. ரொம்ப நன்றி என சொல்கிறான். அப்போது எழில், உனக்கு எந்த கெல்ப் வேணும்னாலும் எனக்கு போன் பண்ணு என சொல்கிறான். ஐஸ்வர்யாவுக்கும் இதையே சொல்லிவிட்டு செல்கின்றனர். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil