Advertisment
Presenting Partner
Desktop GIF

கோபி மனைவி பாக்யாவா? அப்போ நான் யாரு? ராதிகா ஷாக் ரியாஷன்; அடுத்து என்ன?

பாக்கியலட்சுமி சீரியல் அதிரடியான திருப்பம் அரங்கேறியுள்ள நிலையில், கோபியின் மனைவி பாக்யாதான் என்று ராதிகாவிடமே நர்ஸ் கூறியுள்ளனர்.

author-image
WebDesk
New Update
Baakiyalss

கோபி நெஞ்சுவலியால் அவதிப்பட்டதால், அவரை மருதுவமனையில் சேர்த்த பாக்யா, கோபியின் மனைவி என்று டாக்டர்கள் சொல்ல, இதை கேட்ட ராதிகா ஷாக் ஆகியுள்ளார்.

Advertisment

தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், தொடக்கத்தில் பரபரபப்பாக சென்றாலும் இடையில், தேவையில்லாத சில காட்சிகளால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனாலும் சமீபத்திய எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

பாக்யாவை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு அப்பாவான கோபி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தனது பள்ளி தோழி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு பாக்யாவுக்கும் கோபிக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், பாக்யா, சமையல் காண்டராக்ட், ரெஸ்டாரண்ட் வைத்து வாழ்க்கையில் முன்னேறிய நிலையில், அவரது முன்னேற்றத்தை பொருத்துக்கொள்ள முடியாத கோபி பல சதிகளை செய்தார்.

பாக்யாவின் ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன் இறைச்சியை கலந்து கெட்டபெயர் வாங்கி கொடுத்த கோபி,  பாக்யாவிடம் மாட்டிக்கொண்ட நிலையில், பாக்யா கம்ளைண்ட் கொடுத்துவிட்டார். ஆனால் பெயிலில் வந்த கோபி, மீண்டும் பாக்யாவுக்கு தொல்லை கொடுக்க, இதை சகித்துக்கொள்ளாத ராதிகா, கோபியை வெறுத்து ஒதுக்கிவிட்டார். மேலும் கோபி செய்வது தவறு என்று இனியாவே கோபிக்கு அட்வைஸ் கொடுத்தார்.

இனியாவின் பேச்சை பற்றி யோசித்துக்கொண்டே காரில் சென்றுகொண்டிருந்த கோபிக்கு திடீரென நெஞ்சுவலி வர, ராதிகா, அவரின் அம்மா, செழியன், இனியா என அனைவருக்கும் போன் செய்கிறார் யாரும் எடுக்காத நிலையில், பாக்யாவுக்கு போன் செய்ய அவளும் போனை எடுக்காததால், வாய்ஸ் அனுப்ப, அதை கேட்டு பாக்யா போன் செய்து அவரிடம் பேசுகிறார். அப்போது கோபி விஷயத்தை சொல்ல, பாக்யா கோபியை கண்டுபிடித்து மருத்துவமனையில் சேர்க்கிறார்.

அங்கு கோபிக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் பாக்யாவிடம் கையெழுத்து கேட்க, அவள் செழியனை போட சொல்லிவிடுகிறாள். இதனிடையே இன்று மற்றும் நாளைக்கான ப்ராமோ வெளியாகியுள்ளது. இதில் போகியை பார்க்க ஹாஸ்பிட்டலுக்கு வரும் ராதிகாவை ஈஸ்வரி தடுத்து நிறுத்தகிறார். அப்போது நர்ஸ் மருத்து வாங்க வேண்டும் என்று ராதிகாவிடம் சீட்டை கொடுக்க, மற்றொரு நர்ஸ் இவர் இல்ல, அவர் தான் கோபியின் மனைவி அவரிடம் கொடுங்கள் என்று பாக்யாவை கைகாட்டுகின்றனர்.

இதை பார்த்த ராதிகா ஷாக்கில் நிற்க, அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. கோபி பலமுறை போன் செய்தும் ராதிகா எடுக்காத நிலையில், கோபியின் நிலை பற்றி சொல்ல, ராதிகா வீட்டுக்கு பாக்யா சென்றபோது கூட ராதிகா ரெஸ்பான்ஸ் பண்ணாத நிலையில், தற்போது ஹாஸ்பிட்டலில் பாக்யாதான் கோபி மனைவி என்று சொன்னவுடன் அடுத்து ராதிகா என்ன செய்யப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment