/indian-express-tamil/media/media_files/7j3RUPIcOzrYIq3RwiPW.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்ததை அடிப்படையாக கொண்டு வெளியாகி வரும் விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல், பரபரப்புக்கும் விறுவிறுப்புக்கும் பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. பாக்யா, கோபி, ராதிகா ஆகிய 3 கேரக்டர்களை மையமான வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில், குடும்பத்திற்குள் நடக்கும் மோதல்களை காட்டுக்கிறது.
தன்னை விவாகரத்து செய்துவிட்டு கோபி ராதிகாவை திருமணம் செய்துகொண்டாலும், தனது மாமனார் மாமியாரை சிறப்பாக கவனித்து வரும் பாக்யா தனது தொழிலிலும் முன்னேற்றம் கண்டு வரும் நிலையில், அவ்வப்போது பல பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார். இதனிடையே கர்ப்பமாக இருந்த ராதிகாவின் கரு கலைந்தற்கு ஈஸ்வரிதான் காரணம் என ராதிகா பொய்யான கம்ளைண்ட் கொடுத்தார்.
அதன்பிறகு கைது செய்யப்பட்ட ஈஸ்வரியை ராதிகாவின் மகள் மயூ சாட்சி சொல்லி காப்பாற்றினார். அதன்பிறகு இனியா ஒரு சிக்கலில் சிக்க, ராதிகா அவரை காப்பாற்றினார். இதில் ராதிகா பொய் புகார் கொடுத்தது பெரிய விஷயமாக பேசாமல், மயூ கோர்ட்டில் வந்து சாட்சி சொன்னது தான் தவறு என்பது போல் திரைக்கதை அமைத்து, ராதிகாவை நாயகியாகவும், பாக்யாவை வில்லியாகவும் சித்தரித்துள்ளனர்.
தற்போது அனைத்து பிரச்சனைகளும் ஓய்ந்துள்ள நிலையில், அடுத்து ஈஸ்வரி தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார். அடுத்து வரும் எபிசோடுகளில், செழியன் வீட்டு செலவுக்கு பாக்யாவுக்கு பணம் கொடுக்க, ஈஸ்வரி எழிலிடம் நீயும் பணம் கொடு, அதுக்கு டைரக்டர் ஆவதை விட்டுவிட்டு எதாவது ஒரு வேலையை பாரு என்று சொல்கிறார். அடுத்து செழியனிடம் பேசிக்கொண்டிருக்கும் ஜெனி வாந்தி எடுக்கிறாள். அப்போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரிகிறது.
இதை தெரிந்துகொண்ட ஈஸ்வரி அமிர்தாவிடம், நீ எப்போ குழந்தை பெத்துக்க போற, நிம்மதியாக வாழனும்னு உனக்கு ஐடியாவே இல்லையா என்று கேட்க, அமிர்தா அழுகிறார். அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோவை பார்த்த நெட்டிசன்கள், இந்த கிழவியை ஜெயில்லேயே விட்டிருக்கலாம் என்று கருத்துக்களை கூறி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.