/tamil-ie/media/media_files/uploads/2023/05/Baakiyalakshmi2.jpg)
பாக்கியலட்சுமி சீரியல் ப்ரமோ
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. திருமணத்திற்கு மீறிய உறவு, பெண்கள் முன்னேற்றம் உள்ளிட்ட பலவற்றை பற்றி எடுத்து கூறும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபி பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு ராதிகாவுடன் தனது வீட்டுக்கு அருகிலேயே குடியேறிய கோபி தற்போது பாக்யா இருக்கும் வீட்டிலேயே ராதிகாவுடன் வந்துவிட்டார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்த நிலையில், கர்ப்பமாக இருந்த ஜெனி கடந்த வார எபிசோட்டில் தவறி விழுந்துவிட்டார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாத நிலையில், ராதிகா ஜெனியை ஹாஸ்பிடலுக்கு அழைத்துச்செல்கிறார். அதன்பிறகு பாக்யா செழியன் ஆகியோருக்கு போன் செய்து சொல்லும் ராதிகா அதன்பிறகு ஆபீஸ் போகிறார். ஜெனிக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட ஹாஸ்பிடலில் இருந்து வீட்டுக்கு வருகிறார். அந்த நேரத்தில் ராதிகாவும் வர நீதான் ஜெனியை தள்ளிவிட்டீயா என்று ஈஸ்வரி பாட்டி கேட்கிறார்.
இதனால் ராதிகா அதிர்ச்சியாகும் நிலையில், இந்த வார எபிசோட்டில் பாக்யா ராதிகாவுக்கு நன்றி சொல்கிறார். இந்த ப்ரமோவில் நேற்று நீங்கள் செய்த உதவிக்கு ரொம்ப நன்றி மேடம். ஹாஸ்பிடலில் சேர்த்து நாங்கள் வர வரைக்கும் நீங்கள் கூட இருந்து பாத்துக்கிட்டீங்க. இதை அவ்வளவு ஈஸியா யாரும் செய்துவிட மாட்டார்கள். நான் சாதாரன ஹவுஸ் வைப்தான் உங்களை பார்த்தால் பாசிட்டீவாக இருந்தது.
அசால்டா எல்லாமே ஹேண்டில் பண்ணுவீங்க. அப்படி பார்த்த உங்களை இப்படி பார்கிறது ரொம்ப கஷ்டமா இருக்கு ராதிகா நீங்கள் எல்லாவற்றையும் இழந்து நிற்பது போல் இருக்கிறது என்று பாக்யா ராதிகாவிடம் சொல்கிறார். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், பாக்யாவும் ராதிகாவும் ஒன்று சேர்ந்துவிட்டால் கோபியின் நிலைமை என்ன என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
அதேபோல் காத்து வாக்குல ரெண்டு காதல் போல் கத்திஜா கண்மணி என்று குறிப்பிட்டு கமெண்ட்ட செய்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.