ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த பொய் புகாரின் காரணமாக சிறை தண்டனை வரை சென்று கடைசியில், மயூவின் சாட்சியால் வெளியில் வந்த ஈஸ்வரி இப்போது மகனே இல்லை எனது மகள் பாக்யா தான் என்று கூறியுள்ளார்.
Advertisment
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. கோபி, ராதிகா, பாக்யா ஆகிய 3 கேரக்டர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்னைகள் மற்றும் சம்பவங்களை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியலில் கோபியின் 2-வது மனைவி ராதிகாவின் கர்ப்பம் கலைந்தற்கு ஈஸ்வரிதான் காரணம் என்று ராதிகாவின் அம்மா கேஸ் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் இருந்து ஈஸ்வரியை பாக்யா எப்படி காப்பாற்றுவார் என்று அனைவரும் எதிர்பாத்து காத்துக்கொண்டிருந்த நிலையில், ராதிகாவின் மகள் மயூ ஈஸ்வரிக்கு ஆதரவாக சாட்டி சொன்னதை தொடர்ந்து இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி விடுதலையாகி வெளியி வருகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறி இருக்கும் நிலையில், ஈஸ்வரி மீது பொய் புகார் கொடுத்த கமலாவுக்கு அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அதேபோல், ஈஸ்வரியை ஜெயிலில் அடைக்க, பாடுபட்ட கமலா மற்றும் ராதிகாவிடம் கோபி எப்படி நடந்துகொள்வார்,? தனக்கு எதிராக சாட்சி சொன்ன மயூ மீது ஈஸ்வரி என்ன செய்ய போகிறார் என்பது குறித்து அடுத்து வரும எபிசோடுகள் குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வரும் எபிசோடுகளுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது.
இதில் ஈஸ்வரி, பாக்யா வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது அங்கு வரும் கோபி, அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என்று மன்னிப்பு கேட்க, டேய் போடா, உனக்கும் எனக்கும் இருந்த அம்மா பையன் உறவு முடிந்து போனது. எனக்கு ஒரே ஒரு மகள் தான் அது பாக்யா தான். கோபிநாத் என்ற ஒருத்தன் என் வயிற்றில் பிறக்கவே இல்லை. இன்னையோட உன்னை நான் தலைமுழுகுகிறேன் என்று சொல்லி ஈஸ்வரி நடு வீட்டில் தலையில் தண்ணீர் ஊற்ற அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது.
இந்த ப்ரமோ தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கோபி பாவம் ராதிகாவும் அவள் அம்மாவும் செய்த தப்புக்கு கோபி என்ன செய்வார் என்றும், இது கோபிக்கு வேண்டும் தான் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“