விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு, மாரடைப்பால் பாதிக்கப்பட்ட தனது முன்னாள் கணவன் கோபியை மருத்துவமனையில் சேர்த்து பாக்யா காப்பாற்றிய நிலையில், அவரது அம்மா, ஈஸ்வரி, கோபியை மீண்டும் தனது வீட்டுக்கு அழைத்து செல்ல நினைக்கிறார். அதன் காரணமாக கோபியின் 2-வது மனைவி ராதிகாவை கோபியை நெருக்க விடாமல் தடுக்கிறார்.
அதே சமயம் பாக்யா, மீது வெறுப்பில் இருந்த கோபி இப்போது அவளிடம் அன்பாக நடந்துகொள்கிறான். மருத்துவமனையில் இருந்து கோபி, ராதிகா வீட்டுக்கு தான் செல்ல வேண்டும் என்று, பாக்யா விரும்ப, ஈஸ்வரி தன்னுடன் அழைத்து செல்ல முயற்சிக்க, கோபியும் அம்மா பேச்சை கேட்டு, பாக்யா வீட்டுக்கு சென்றுவிடுகிறான். இதனால் அதிர்ச்சியான ராதிகா, பாக்யா வீட்டுக்கு சென்று கோபியை பார்த்து வருகிறாள்.
பாக்யா வீட்டுக்கு வரும் ராதிகாவிடம், ஈஸ்வரி ஒவ்வொருமுறையும் நீ இனிமேல் இங்கு வர கூடாது கோபியை நிம்மதியாக இருக்க விடு என்று சொல்லி அனுப்புகிறாள். இதனால் விரக்தியான ராதிகா, தனியாக வாழ முடிவு செய்து வீட்டை காலி செய்ய முடிவு செய்துவிட்டார். இந்த விஷயம் பாக்யாவுக்கு தெரியவந்து பாக்ய ராதிகாவை சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். இருவருக்கும் இடையே பழைய நட்பு மீண்டும் உருவாகியுள்ள நிலையில், புதிய வில்லியாக ஈஸ்வரி உருவெடுத்துள்ளார்.
ராதிகாவை பிரிந்து பாக்யா வீட்டில் இருக்கும்போகி, ராதிகாவை விவாகரத்து செய்துவிட்டு, பாக்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி விரும்புகிறார். ஆனால் ராதிகாவுடன் தான் கோபி இருக்க வேண்டும் என்று விரும்பும் பாக்யா, நேற்றைய எபிசோட்டில், கோபிக்கு புத்தி சொல்லி, ராதிகாவை பார்க்க அனுப்பி வைத்தார். கோபி ராதிகாவை பார்க்க சென்றதால் ஈஸ்வரி கடும் கோபத்தில் பாக்யாவிடம் சண்டை போடுவது போல் எபிசோடு முடிந்தது.
தற்போது அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் ராதிகா வீட்டை விட்டு போய்விட்டால் என்று கோபி சொல்ல, அவ கூடல்லாம் யாரும் வாழவே முடியாது என்று ஈஸ்வரி சொல்கிறார். இதை கேட்ட பாக்யா, எப்படியோ போனு ராதிகாவை விட்டுவிட்டு நீங்கள் இங்கு வந்திருக்க கூடாது. இனியாவை இப்படி ஒருவர் கல்யாணம் பண்ணிட்டு விட்டுட்டு போய்ட்டா அது உங்களுக்கு சரியாக இருக்குமா என்று கேட்கிறாள்.
உடனே கோபி, ஈஸ்வரி பேச்சை கேட்காமல், ராதிகாவை தேடிப்போகிறார். அதன்பிறகு ஈஸ்வரி என் மகன் திரும்ப வருவான் என்று சொல்லிக்கொண்டிருக்க, கோபி மீண்டும் பாக்யா வீட்டுக்கு வந்து, நீங்க சொன்ன மாதிரியே மறுபடியும் நான் வந்துட்டேன் மா என்று சொல்ல, ஈஸ்வரி, இனியா, சொழியன் ஆகியோர் சந்தோஷப்படுகின்றனர். அடுத்த கனம், ராதிகா மற்றும மயூவுடன் வந்திருப்பதாக கோபி அவர்களை காட்ட ஈஸ்வரி அதிர்ச்சியாகிறார். அத்துடன் ப்ரமோ முடிகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.