விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபியின் இரண்டாவது மனைவி ராதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இந்த கேரக்டரில் ஏற்கனவே நடித்து வந்த ஜெனிபர் வெளியேறியதை தொடர்ந்து ரேஷ்மா அந்த கேரக்டரில் நடிக்க என்ட்ரி ஆனார். இதனிடையே தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள புதிய சீரியல் ஒன்றில் முக்கிய வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இவர் பாக்கியலட்சுமி தொடரில் தொடர்ந்து நடிப்பாரா? அல்லது விலகிக் கொள்வாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஜீ தமிழ் சீரியலில் ரோஜா பிரபலம்?
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொடர்ந்து புதுப்புது சீரியல்கள் களமிறங்கி வருகின்றன. இதில் சில மாதங்களுக்கு முன்னர் கார்த்திக் ராஜ் நடிப்பில் கார்த்திகை தீபம் என்ற சீரியல் தொடங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மதிய வேளையில் கனா, இந்திரா என இரண்டு புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக வரும் நிலையில், சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியல் நாயகன் சிபு சூரியன் ஜீ தமிழின் புது சீரியலில் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகின.
Advertisment
Advertisements
ஆனால் இந்த தகவலை சிபு சூரியன் மறுத்து பேசியிருந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ள " சீதா ராமன் " என்ற புதிய சீரியலில் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா நல்காரி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
பாண்டியன் ஸ்டோர் சீரியல் குறித்து ரசிகர்கள் கருத்து
விஜய் டிவியின் கடந்த சில ஆண்டுகளாக வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்யன் ஸ்டோர்ஸ். சகோதர பாசம், கூட்டுக்குடும்பம் என முக்கிய தேவைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், தற்போது பரபரப்பான கட்டத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே தற்போது இந்த சீரியலுக்கு என்ட் எப்போது என்று ரசிகர்கள் கேட்க தொடங்கிவிட்ட நிலையில், எல்லோரும் எதிர்பார்ப்பது சீரியல் முடிவு ஆனால் ரியாலிட்டியில் எனக்கு என்டே கிடையாது என்று தலைநகரம் வடிவேலு டைலாக் வைத்து ரசிகர்கள் பதிவிட்டுள்ள மீம்ஸ் தற்போது வைரலாகி வருகிறது.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பிரபல சீரியல் நடிகை
விஜய் டிவியின் மௌனராகம் சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரவீனா. நடிப்பில் அசத்தி வரும் இவர், எந்த மாதிரியான காட்சியாக இருந்தாலும் தனது அசாத்தியமான நடிப்பால் கவர்ந்துவிடுகிறார். இதனால் இந்த சீரியலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், மௌனராகம் சீரியலுடன் விரைவில் தொடங்க உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசனில் ரவீனா பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இறுதி அத்தியாயத்தை நோக்கி விஜய் டிவி சீரியல்
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாரதி கண்ணம்மா தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இடையில் பல எபிசோடுகள் சலிப்பை ஏற்படுத்தியதால் இந்த சீரியல் எப்போது முடியும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், தற்போது பாரதி கண்ணம்மா விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக ப்ரமோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil