என்ன பாக்யா மேடம்... நீங்கள் இப்படி இருக்க காரணம் என்னவோ?

Tamil Serial Update : அவரே அவரை பற்றி சொன்னால் ஒருவேளை அவர் நல்லவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது

Tamil Serial Update : அவரே அவரை பற்றி சொன்னால் ஒருவேளை அவர் நல்லவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது

author-image
WebDesk
New Update
என்ன பாக்யா மேடம்... நீங்கள் இப்படி இருக்க காரணம் என்னவோ?

Tamil Serial Baakiyalakshmi Rating Update : என்ன பாக்யா மேடம் விட்டா நீங்களே கோபிக்கு ராதிகாவை கல்யாணம் பண்ணி வச்சிடுவீங்க போலயே நல்ல மனைவி சுமாரான கணவன் எச்சரிக்கையான முன்னாள் காதலி என்று சொல்ல வைக்கிறது பாகயலட்சுமி சீரியல்.

Advertisment

விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்யலட்சுமி. மனைவிக்கு தெரியாமல் முன்னாள் காதலியுடன் பழக்கி, அவரை திருமணம் செய்துகொள்ள எப்படி முயற்சி செய்ய வேண்டும் என்பதை தெளிவாக எடுத்த சொல்லும் சீரியல்தால் பாக்யலட்சுமி. இது பற்றி தெரியாதவர்கள் இந்த சீரியலை பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

கோபி 3 குழந்தை, மனைவி பாக்யா ஒரு மருமகள், அப்பா அம்மா என அன்பான குடும்பத்தை விட்டுவிட்டு கணவனிடம் இருந்து டைவர்ஸ் வாங்கிய முன்னாள் காதலியை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அதற்கான முயற்சியில் முக்கால் கிணறை தாண்டிவிட்டார். ஆனால் இடையில் மகாசங்கமத்திற்கு வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கோபியின் தலையில் மண்னை வாரி அடித்துவிட்டு சென்றுவிட்டார்கள்.

இதனால் கோபியை சந்தேகப்படும் ராதிகா உங்கள் குடும்பத்தை பார்க்க வேண்டும் என்று சொல்ல, அதற்கு கோபி முடியாது என்று சொல்லிவிட சட்டுனு கோபியை வெளியில போங்க என்று ராதிகா துராத்தி விடுகிறார். இதனால் அதிர்ச்சியாகும்கோபி குடித்துவிட்டு ராதிகா வீ்ட்டுக்கு சென்ற அத்தனை உண்மையை சொல்லிவிடுகிறார்.

Advertisment
Advertisements

இதனால் கடுப்பாகும் ராதிகா கோபியை வெளியில் தள்ளி கதவை சாத்திவிட்டு பாக்யாவை நினைத்து புலம்புகிறார். இநநிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், ராதிகாவை பார்க்க வரும் பாக்யாவிடம் புலம்பி தீர்க்கிறார். அவர் சொன்னது எல்லாமே பொய் என்று சொல்ல, யார் சொன்ன என்று பாக்யா கேட்கிறார். அதற்கு அவரே சொன்னார் என்று ராதிகா சொல்கிறாள்.

இதை கேட்டு பாக்யா அவரே அவரை பற்றி சொன்னால் ஒருவேளை அவர் நல்லவராக இருக்கவும் வாய்ப்பு உள்ளது என்று என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி ஆகிறார். அதன்பிறகு தனது வீட்டிற்கு நீங்க விரும்புனவரை கட்டிக்கொண்டு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோவை பார்த்த ரசிகர்கள் பாக்யாவை கடுமையாக விமர்சித்து வருகினறனர்.

அதில் ஒரு ரசிகர் பாக்கியா தான் தலையில் தானே மண்ணை அள்ளி பொட்டுகிறாங்க என்றும் மற்றொருவர், முட்டால்தனத்தின் முழுஉருவம் பாக்கியலட்சுமி... என்றும், கோபி என்ற ஒருவரால் தான் இந்த சீரியல் நன்றாக ஓடுகிறது . சின்னத்திரை ரகுவரன் என்றும் அவரு அவருனு  சொல்றியேமா அவருக்கு பதிலா கோபினு சொன்னா கதை முடுஞ்சுறுமே என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: