scorecardresearch

ராதிகா நீங்கதானா அந்த பொண்ணு? அதிர்ச்சியில் பாக்யா…

கோபிநாத் ஃவைப் யாருங்க என்று கேட்க ராதிகா நான்தான் என்று சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு கோபியை பார்க்க செல்கிறார்.

ராதிகா நீங்கதானா அந்த பொண்ணு? அதிர்ச்சியில் பாக்யா…

சின்னத்திரையில் விஜய் டிவியின் அடையாளங்களில் ஒன்று பாக்கியலட்சுமி சீரியல். கணவன் மனைவியிடமும் மனைவி கணவனிடமும் எப்படியெல்லம் இருக்க கூடாது என்பதற்கு இந்த சீரியல் ஒரு முக்கிய உதாரணம் என்றுதான் சொல்ல வேண்டும். பெண்கள் ஆண்களுக்கு சமமாக முன்னேறி வரும் இந்த காலகட்டத்தில் பெண்களை மீண்டும் 80-க்கு அழைத்து செல்லும் வகையில் பாக்யலட்சுமி கேரக்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரசிகர்கள் இப்படி பேசிக்கொள்வது இயக்குநருக்கு கேட்டுவிட்டது போல தற்போது பாக்யா தனது கணவர் கோபி என்ன செய்கிறார் என்பது குறித்து கேள்வி கேட்க தொடங்கிவிட்டார். கோபி தனது மனைவியை பிரிந்து முன்னாள் காதலி ராதிகாவை திருமணம் செய்துகொள்ள நினைப்பதும், ராதிகா பாக்யாவின் நெருங்கிய தோழி என்பதும் கோபி பாக்யாவின் கணவன் என்று தெரிந்து ராதிகா ஒதுங்கி செல்வது இவ்வளவு நாள் சென்றுகொண்டிருந்தது.

இடையில் பாக்யாவின் வாழ்க்கையில் குறுக்கிட கூடாது என்று நினைத்து ராதிகா மும்பைக்கு செல்வதாக கூறியிருந்தார். ஆனால் அதற்குள் கோபிக்கு அக்ஸிடன்ட் ஆன பாக்யாவுக்கும் ராதிகாவுக்கு ஒரே நேரத்தல் ஹாஸ்பிடலில் இருந்து தகவல் வருகிறது. இதனால் இருவரும் பதறியடித்துக்கொண்டு ஓட, அங்கு ஹாஸ்பிடலில் கோபிநாத் ஃவைப் யாருங்க என்று கேட்க ராதிகா நான்தான் என்று சொல்லிவிட்டு கையெழுத்து போட்டுவிட்டு கோபியை பார்க்க செல்கிறார்.

வழக்கம்போல் எதுவும் தெரியாத பாக்யா நான்தான் கோபிநாத் ஷவைப் என்று நர்ஸிடம் சொல்ல, அப்போ உள்ள போய்ருக்கிறது யாரு என்று நர்ஸ் கேட்கிறார். இதனால் அதிர்ச்சியாகும் பாக்யா உள்ளே சென்று பார்க்கும்போது கோபி ராதிகாவிடம் நீ என்னை விட்டு போய்விடாதே நீ இல்லை என்றால் நான் இல்லை என்று காதல் வசனம் பேசிக்கொண்டிருக்கிறார். இதை பார்த்த பாக்யா அதிர்ச்சியில் உறைய அத்துடன் முடிகிறது ப்ரமோ.

பாக்யாவின் வாழ்க்கையில் தலையிட கூடாது என்று முடிவு செய்த ராதிகா இப்போது கோபியின் ஃவைப் நான்தான் என்று எதற்காக கையெழுத்து போட வேண்டும் கோபிக்கு ஆக்ஸிடன்ட் என்றால் அவர் வீட்டுக்கும் சொல்லியிருப்பார்கள் அவர்கள் யாராவது வந்துள்ளார்களா என்பதை கவனிக்கும் மனநிலையில் ராதிகா இல்லையோ என்று கேட்க தொன்றுகிறது.

எது எப்படியோ இன்றும் ராதிகா – கோபி ரிலேஷன்ஷிப் தெரியான 3 பேர் இனியா, ஈஸ்வரி செழியன். தற்போது இந்த உண்மையை தெரிந்துகொண்ட பாக்யா அடுத்து என்ன முடிவு எடுக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.   

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi rating update with promo in tamil