scorecardresearch

Vijay TV Serial: ‘எங்க அம்மாவுக்கு யாரையாவது புடிச்சிருந்தா உங்களுக்கு என்ன பிரச்னை கோபி சார்’

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல உங்களுக்கு எங்க அம்மாவை பற்றி பேச என்ன உரிமை இருக்கு.

Baakiyalakshmi
பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபிக்கு எதிராக குடும்பத்தினர் அனைவரும் கைகோர்த்துள்ள நிலையில், எழில் கோபிக்கு எச்சரிக்கை விடுக்கும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது பரபரப்பாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், கோபி தனது 2-வது மனைவி ராதிகாவுடன் முதல் மனைவி பாக்யா இருக்கும் வீட்டிலேயே குடியேறியதில் இருந்து அடுத்தடுத்து பல சுவாரஸ்யமாக காட்சிகள் அரங்கேறி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2 தினங்களுக்கு முன் ஒளிபரப்பான எபிசோட்டில், ராதிகாவை திட்டியதால் ஈஸ்வரியிடம் கேள்வி கேட்டுகும், கோபி, பாக்யா அந்த பழனிச்சாமியிடம் பேசுவதற்காகத்தான் க்ளாசுக்கு போகிறாள் என்று சொல்கிறார். இதை கேட்டு எழில் அப்பா கோபிக்கு எச்சரிக்கை கொடுக்கும் நிலையில், கோபி மீண்டும் மீண்டும் அதையே சொல்லி பேசுகிறார்.

இதனால் கடுப்பான எழில் அப்பா கோபியின் சட்டையை பிடிக்க போக திடீரென என்ட்ரி கொடுக்கும் செழியன் அப்பாவின் சட்டையை பிடித்து இனிமேல் எங்க அம்மாவை பற்றி எதுவும் பேசக்கூடாது என்று சொல்லி அடிக்க ஓங்கிய கையை நிறுத்திக்கொள்கிறார். இதனால் ஷாக்கில் இருக்கும் கோபியிடம் அனைவரும் ராதிகாவை பற்றி குறை சொல்லி வருகின்றனர்.

இதனிடையே காலையில் வாக்கிங் செல்லும் கோபி எழிலை சந்தித்து செழியன் தன்னை அடிக்க வந்தது குறித்து பேசுகிறார். அதற்கு எழில் அவன் உங்களை அடிக்கவில்லை என்றால் நானே உங்களை அடித்திருப்பேன் என்று சொல்கிறார். அதன்பிறகு நீ நினைக்கிற மாதிரி உங்க அம்மா நல்ல இல்லடா என்று கோபி சொல்ல உங்களுக்குதான் கல்யாணம் ஆகிடுச்சே அப்புறம் எதற்கு எங்க அம்மாவை பத்தி யோசிக்கிறீங்க என்று கேட்கிறார்.

உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சில்ல உங்களுக்கு எங்க அம்மாவை பற்றி பேச என்ன உரிமை இருக்கு. எங்க அம்மா கூட இருக்கும்போதே அவங்களை ஏமாற்றிய ஆள் தானே நீங்கள். நீங்க இதை பற்றி பேசலாமா? உங்களுக்குனு ஒரு ஃபேமிலி இருக்குல்ல அதை பார்த்துக்கிட்டு போக வேண்டிதானே எதற்கு தேவையில்லாம எங்க அம்மா விஷயத்தில் வந்து மூக்க நுழைக்கிறீங்க என்று எழில் கேட்கிறார்.

அப்படியெல்லம் விட முடியாது. அந்த வீட்டில் எங்க அம்மா அப்பா இருக்காங்க என் பசங்க நீங்க இருக்கீங்க என் மருமகள்கள் இருக்காங்க. உங்க அம்மா பண்ற விஷயத்தால உங்களுக்கு எதாவது கெட்ட பேர் வந்துடுச்சினா என்று கோபி கேட்க, இனிமேல் இந்த வீட்டில் வரதுக்கு என்ன இருக்கு ஒரு குடும்பத்தில் என்னென்ன பாதிப்பு வருமோ அது எல்லாமே உங்க மூலமாக எங்க குடும்பத்திற்கு வந்தாச்சு என்று எழில் சொல்கிறார்.

மேலும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ன பண்ணணும்னு எங்க அம்மாவுக்கு நல்லா தெரியும். எங்க அம்மா ஒரு நாளும் தப்பு பண்ண மாட்டாங்க என்று எழில் சொல்ல, அவ எதற்கு அடிக்கடி அந்த ஆள் வீட்டுக்கு போய் சிரிச்சி சிரிச்சி பேசிட்டு இருக்கா என்று கோபி கேட்கிறார். இதற்கு பதில் சொல்லும் எழில், அவங்களுக்கு புடிச்சிருக்கு அவங்க பேசுறாங்க. உங்களுக்கு யாரையாவது பிடிச்சிருந்தா அது பிரச்சனை இல்லை. ஆனா எங்க அம்மாவுக்கு யாரையாவது புடிச்சிருந்தா அது உங்களுக்கு பிரச்சனை அப்படி தானே கோபி சார்?

இதற்கு நானும் அவளும் ஒன்னாடா என்று கோபி கேட்க, நீங்களும் எங்க அம்மாவும் ஒன்னு இல்ல. எங்க அம்மா ரொம்ப நல்லவங்க அவங்க ரொம்ப ரொம்ப உயரத்தில் இருக்காங்க தயவு செய்து எங்க அம்மாவை உங்களுடன் சேர்த்து கம்பேர் பண்ணாதீங்க என்று சொல்லிவிட்டு எழில் கிளிம்பிவிடுகிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi recent promo eazhil gopi conversation