பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவுக்கு பக்கபலமாக இருந்த ராமமூர்த்தி இறந்துவிட்ட நிலையில், அவரின் இறுதிச்சடங்கு தொடர்பான எபிசோடுகள் தற்போது ஒளிபரபரபாகி வருகிறது. இதில், கோபி ராமமூர்த்திக்கு இறுதிச்சடங்கு செய்ய கூடாது என்று ஈஸ்வரி அனைவருக்கும் அதிர்ச்சி அளித்துள்ளார்.
ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை போராட்டத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள சீரியல் பாக்கியலட்சுமி. விஜய் டிவியின் ப்ரைம் டைம் சீரியலான இதில், பாக்யா, கோபி, ராதிகா ஆகிய 3 கேரக்டர்கள் முக்கியம் என்றாலும் துணை கேரக்டராக வரும் பாக்யாவின் மாமனார் ராமமூர்த்தி மற்றும் மாமியார் ஈஸ்வரி ஆகிய இருவரும் சிறப்பாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம் படித்துள்ளனர்.
பாக்யாவினக் கணவர் கோபி, பாக்யாவை விவாரகத்து செய்துவிட்டு, ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். இதனால் பாக்யாவின் வாழ்க்கையில் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும், பக்கபலமாக இருந்தவர் மாமனார் ராமமூர்த்தி. ஈஸ்வரி கூட ஒரு சில நேரங்களில் மகனுக்கு ஆதரவாக பேசி, பாக்யாவை இழிவுபடுத்தினாலும், தற்போது மகனின் சுயரூபத்தை புரிந்துகொண்டு பாக்யாவுக்கு ஆதரவாக இருந்து வருகிறார்.
அதே சமயம் தொடக்கத்தில் இருந்தே மருமகள் பாக்யாவுக்கு ஆதரவாக இருந்த ராமமூர்த்திக்கு கடந்த வாரம் 80-வது பிறந்த நாள் கொண்டாடப்பட்ட நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் ராமமூர்த்தி இறந்துவிட்டார். இந்த காட்சி சீரியல் பார்க்கும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாக்யலட்சுமி சீரியலில் இருந்த உருப்படியான ஒரு கேரக்டரையும் இப்படி சாகடிச்சிட்டீங்களே என்று ரசிகர்கள் கருத்து கூறி வந்தனர்.
இதனிடையே ராமமூர்த்தி சாவதற்கு முன்பு, நான் இறந்தால் எனக்கு கோபி கொள்ளி வைக்கவோ இறுதிச்சடங்கு செய்யவோ கூடாது என்று கூறியிருந்தார். தற்போது கோபி, ராமமூர்த்திக்கு இறுதிச்சடங்கு செய்ய தயாராகியுள்ள நிலையில், ஈஸ்வரி அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நீங்கள் எங்கள் பிள்ளையே இல்லை. என்னை இவ்வளவு நேரம் இங்கு நிற்க வைத்ததே தவறு என்று ஈஸ்வரி சொல்ல, என் அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய எனக்கு உரிமை உள்ளது என கோபி சொல்கிறார்.
அவர் உனக்கு அப்பா ஆகும் முன்பே எனக்கு கணவர் என்னை விட எனக்கு உரிமை அதிகம். நான் முடிவு எடுத்தால் எடுத்தது தான். என் கணவரின் கடைசி ஆசையை நிறைவேற்றப்போகிறோன். கோபி இறுதிச்சடங்கு செய்ய கூடாது என்று சொல்கிறார். அருகில் இருக்கும் பழனிச்சாமி, செழியன், எழில் என பலரும் சொல்ல, ஈஸ்வரி தனது முடிவில் தெளிவாக இருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“