Baakiyalakshmi Serial Episode Update : ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொடுக்க வரும் பாக்யா, இனியா ஸ்கூலில் நடக்கும் பங்ஷன் பற்றி சொல்கிறாள். மேலும் என்னை கண்டிப்பா வரணும் இனியா சொல்றா அதான் என்ன பண்றதுன்னே தெரியலை என சொல்கிறாள். அதற்கு ராதிகா, பரிசு ஜெயிக்கனும்னு இல்ல கலந்துகிட்டாலே போதும் ஜாலியா ஏதாவது பண்ணுங்க என சொல்கிறாள். அதனை தொடர்ந்து பாக்யா வீட்டிற்கு வருகிறாள். அப்போது ஈஸ்வரி போனமா வந்தமானு வராட்டியா ஏன் லேட் என்று கேட்க, பாக்யா அங்கு பேசிகொண்டிருந்ததாக கூறுகிறாள். அதன்பிறகு பாக்யாவிடம் ராதிகா சொன்னதையே இனியாவும் சொல்கிறாள்.
ஆனால் கண்டிப்பா நீ ஸ்கூல் பங்ஷன்ல கலந்துக்கனும் என சொல்ல எழிலும், உனக்குள்ள கண்டிப்பா ஏதாவது திறமை இருக்கும்மா. நீ தைரியமா கலந்துக்க என சொல்கிறான். அதன்பிறகு மதியம் ராதிகா வீட்டிற்கு சாப்பாடு கொண்டு போகும் போது மயூ டான்ஸ் பிராக்டிஸ் பண்ணி கொண்டிருக்கிறாள். அப்போது ராதிகாவும் அவளுடன் சேர்ந்து டான்ஸ் ஆட பாக்யா ஆச்சரியமாக பார்க்கிறாள்.
அதன்பின்னர் மயூ அவளையும் டான்ஸ் ஆட கூப்பிட இருவரும் ஆடி கொண்டிருக்கின்றனர். அப்போது கோபி அங்கு வர்ற வாசலிலே, உள்ளே பாக்யா ஆடி கொண்டிருப்பதை பார்த்து அவசரமாக கிளம்பி விடுகிறான். இதனால் அதிர்ச்சியாகும் பாக்யா ராதிகாவிடம் யாரோ வந்துட்டு போன மாதிரி இருந்துச்சு என்று சொல்கிறாள். ஆனால் வெளியில் வந்து பார்க்கும் ராதிகா யாரும் இல்லை என்று சொல்கிறாள். அதனை தொடர்ந்து பாக்யாவும் வீட்டிற்கு கிளம்பி விடுகின்றனர். அதன்பின்னர் கோபி வீட்டிற்கு வந்ததும், அவனிடம் நாளைக்கு ஸ்கூல்ல நடக்க போற பங்ஷன்ல அம்மா டான்ஸ் ஆட போறாங்க என இனியா சொல்கிறாள்
அப்போது கோபியும், ஈஸ்வரியும் சேர்ந்து அவளை கிண்டல் செய்கின்றனர். அதன்பின்னர் அவனையும் ஸ்கூலுக்கு கூப்பிடுகிறாள் இனியா. அதற்கு அவன் முயற்சி பண்றேன் என சொல்கிறாள். அதன்பின்னர் அனைவரும் சென்ற பிறகு கோபி அவளிடம் உனக்கு டான்ஸ் ஆட தெரியுமா பாக்யா என கேட்கிறான். அப்போது பாக்யா ஸ்கூல் படிக்கும் போது டான்ஸ் கத்துகிட்டதாக சொல்கிறாள். எனக்கு டான்ஸ் ரொம்ப முடிக்கும். டான்ஸ் ஸ்கூல்லாம் வைக்கனும்னு ஆசைங்க என சொல்கிறாள். அப்போது பாட்டு போட கோபி முன்பு டான்ஸ் ஆடுகிறாள் பாக்யா. இதனை வாசலில் இருந்து பார்க்கும் எழில், அவள் ஆடுவதை வீடியோ எடுக்கிறாள் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil