Tamil Serial Baakiyalakshmi Episode Update : கோபி முன்பு டான்ஸ் ஆடும் பாக்யா ஒரு கட்டத்தில் கோபியிடம் சாரிங்க ஏதோ ஞாபகத்துல ஆடிட்டேன் என்று சொல்ல, ரொம்ப நல்லா டான்ஸ் ஆடுன பாக்யா என்று கோபி சொல்கிறான். அதை கேட்கும் பாக்யா நிஜமாவாங்க என்று கேட்க நீ இவ்ளோ அழகா டான்ஸ் ஆடுவேனு எனக்கு தெரியாது ரொம்ப நல்லா ஆடுன என்று சொல்லிவிட்டு செல்கிறான். அதன்பிறகு அங்கு வரும் எழில் நல்லா சூப்பரா டானஸ் ஆடுன அம்மா இங்க பாரு என்று வீடியோவை காண்பிக்கிறான். இதனால் வெக்கத்தில் பாக்யா உள்ளே செல்கிறாள்.
அதன்பிறகு காலையில் அனைவரும் அமர்ந்திருக்கும்போது பாக்யா டான்ஸ் ஆடியதை எழில் ஈஸ்வரியிடம் சொல்கிறான். அப்போது பாக்யா அங்கு வர அவளிடம் டான்ஸ் ஆடுனியா என்று ஈஸ்வரி கேட்கிறாள். அதற்கு பாக்யா சந்தோஷகத்தில் ஆடியதாக சொல்கிறாள். அதன்பிறகு செல்வியை அழைத்து வேலை சொல்லிவிட்டு மாமா அத்தை நல்லா பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு இனியாவுடன் புறப்படுகிறாள். அடுத்து பள்ளிக்கு இனியா பாக்யா இருவரும் வருகின்றனர்.
அப்போது இனியா ப்ரண்ன்ஸ் அங்கு வர அனைவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது போட்டிகள் எப்படி நடைபெறும் என்று அனைவரும் பேசிக்கொண்டிருக்கும்போது இனியா ப்ரண்ஸ் தங்களது அம்மா என்ன செய்ய போகிறார்கள் என்று சொல்கின்றனர். அப்போது பாக்யா என்ன செய்ய போகிறார் என்று கேட்க இனியா சர்ப்ரைஸ் என்று சொல்லி சமாளிக்கிறாள். இதனையடுத்து சமையல் செய்யும் இடத்தில் இனியா பாக்யா நிற்ன்றனர்.
அப்போது அங்கு வரும் இனியா ப்ரணடஸ் உங்க அம்மா சமைக்க போறாங்களா என்று கேட்க, இனியா கோபமாக அவர்களை துரத்தி விடுகிறாள். அப்போது அங்கு வரும் ராதிகா மயூ இருவரும் பாகயாவை பார்த்து பேசிக்கொண்டிருக்கினறனர். அதன்பிறகு அங்கு வரும் பிரின்ஸ்பால் போட்டிய தொடங்கி வைக்கிறார். குறிப்பிட்ட நிமிடம் கழித்து அனைவரும் அங்கு வந்து செய்த்தை பார்வையிடுகின்றனர். மற்றவர்கள் செய்த்தற்கு பாராட்டு கிடைக்கும்போது பாக்யா சாப்பாடு செய்து வைத்திருப்பதை நினைத்து கோபப்படுகிறாள் இனியா.
ஒரு கட்டத்தில் நாம இங்க இருந்து போய்லாமா என்று பாக்யாவிடம் கேட்கிறாள். அம்மாவுக்கு தெரிஞ்சத்தான பண்ணிருக்கேன் என்று பாக்யா சொல்ல சாப்பாட்டுல என்னமா ஸ்பெஷல் இருக்க போகுது என்று இனியா சொல்கிறாள். அதை கேட்டு பாக்யா சோகமாகிறாள் அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil