தமிழ் சின்னத்திரையின் முக்கிய சீரியலான பாக்கியலட்சுமி கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. இடையில் சில வாரங்கள் இழுவையாக சென்றாலும் தற்போது பல அடுக்கடுக்கான திருப்பங்களுடன் அரங்கேறி வருவது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
வீடு, இங்கிலீஷ் க்ளாஸ், காலேஜ், கேண்டீன் என இருந்த பாக்யாவுக்கு ஆப்பு வைக்கும் விதமாக கேண்டீனில் பெரிய தவறு நடந்தவிட, கேண்டீன் பறிபோகும் நிலை வருகிறது. அப்போது கோடீஸ்வரன் இதுதான் கடைசி வார்ணிங் என்று சொல்லி பாக்யாவை மன்னித்து விடுகிறார். அதன்பிறகு கேண்டீனை தொடர்ந்து நடத்துவதற்காக பாக்யா இங்கிலீஷ் க்ளாஸை நிறுத்திவிட்டார்.
இது அவருடன் படித்தவர்களுக்கு சோகமாக செய்தியாக இருந்தாலும் கோபிக்கு நல்ல செய்திதான். தற்போது காலேஜ் கேண்டீன் வீடு என்று இருக்கும் பாக்யா இடையில் மருமகள் ஜெனியின் வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தி முடித்துவிட்டார். வளைகாப்பு முடிந்து ஜெனி அவரது அம்மா வீட்டுக்கு சென்றுவிட்ட நிலையில், செழியன் தனது க்ளைண்டுடன் சுற்றிக்கொண்டிருக்கிறார்.
இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற பரபரப்பு அடங்குவதற்குள் ராதிகாவின் மகள் மயூ பெரிய மனுஷியாவிட்டார். இதற்கு பங்ஷன் நடத்துவதற்காக கோபி இருக்க வேண்டும் என்தால் இனியாவுடன் அவர் போக இருந்த கேரளா ட்ரிப் கேன்சல் ஆகிறது. இதனால் மனமுடைந்த இனியா இதை தன் அம்மாவிடம் சொல்கிறார். அம்மா பாக்யா செழியனிடம் கேட்க என்னால் முடியாது என்று அவரும் கையை விரித்துவிடுகிறார்.
இதனால் அதிரடி முடிவு எடுக்கும் பாக்யா இனியாவை தானே ட்ரிப்புக்கு அழைத்து செல்வதாக கூறிவிடுகிறார். இவருக்கு துணையாக மாமியார் ஈஸ்வரியும், செல்வியும் போகின்றனர். பாண்டிச்சேரிக்கு சென்று சமையலில் கலக்கிய பாக்யா இந்த கேரளா ட்ரிப்பில் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெருகியுள்ள நிலையில், கோபி அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது குறித்து எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இதனிடையே நடிகை மதுபாலா நீண் நாட்களுக்கு பிறகு சினிமாவில் என்டரி ஆன படம் சுவீட் காரம் காபி. வெப் தொடராக வெளியான இந்த படத்தில் நடிகை மதுபாலா தனது மகள் மற்றும் மாமியார் லட்சுமியுடன் ஒரு ட்ரிப் கிளம்புவார். அதேபோல் தனது மகள் இனியா மற்றும் மாமியார் ஈஸ்வரியுடன் பாக்யா கூடவே தனது உதவியாளர் செல்வியை அழைத்துக்கொண்டு கேரளா ட்ரிப் செல்கிறார்.
கடந்த ஜூலை மாதம் வெளியான ஸ்வீட் காரம் காபி தொடரை அதற்குள் சின்னத்திரைக்கு கொண்டு வந்துட்டீங்களே என்று நெட்டின்கள ஒரு பக்கம் விமர்சனத்தை எழுப்பி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”