Advertisment

கோபியை வெளுத்து வாங்கிய ராதிகா... ஈஸ்வரிக்கு விழுந்த பலத்த அடி : பாக்யலட்சுமி ப்ரமோ வைரல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது.

author-image
WebDesk
New Update
Radhika Gopi Clash

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனிடையே கடந்த வாரம் நடந்த எபிசோடுகளில் பாக்யா தனது ரெஸ்டாரண்டை திறந்தார். இந்த ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவிற்கு அமைச்சர் வருவதாக பாக்யா கூறியிருந்தார்.

Advertisment

பாக்யாவின் வளர்ச்சி பிடிக்காத கோபி, அமைச்சரின் உதவியாளரை வைத்து பாக்யா ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு அமைச்சர் வரமுடியாதபடி செய்துவிட முயற்சி செய்தார். அதன்படி அமைச்சரின் உதவியாளரும் அமைச்சரின் நிகழ்ச்சிகளை மாற்றியிருந்தாலும், கடைசி நேரத்தில் பாக்யா ரெஸ்டாரண்ட் திறப்பு விழா பற்றி தெரிந்துகொண்டு வந்து சேர்ந்தார்.

அமைச்சர் வரமாட்டார் பாக்யாவுக்கு அவமானம் ஆகும் என்று நினைத்த கோபிக்கு சரியான நோஸ்கட்டாக அமைந்தது இந்த காட்சி. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ளது. இதில், கோபி பாக்யா ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு கோபி போனதை தெரிந்துகொண்ட ராதிகா அவனிடம் சண்டை போடுகிறாள்.

ரெஸ்டாரண்ட் திறப்பு விழா போட்டோஸ் எல்லாம் பார்த்தேன். அதில் இருக்கும் எல்லோரையும் எனக்கு தெரியும். ஆனால் ஒருவரை மட்டும் எனக்கு தெரியவில்லை என்று சொல்லி, கோபியின் போட்டோவை அவனிடமே காட்டி ராதிகா தலையிலேயே அடிக்கிறாள். இதை வெளியில் இருந்து கேட்டுவிட்ட இனியா ஈஸ்வரியிடம் சென்று பற்ற வைக்கிறாள். அப்போது சண்டை முடிந்து ராதிகா கீழே வருகிறாள்.

அவளை பார்த்த ஈஸ்வரி, என்ன கோபியோட சண்டை போடாமல் இருக்க முடியாதா உன்னால என்று கேட்க, நீங்க மாமாவோட சண்டை போடுவதை விட இது கம்மிதான் என்று சொல்ல, ஈஸ்வரி ஷாக் ஆகிறாள். பாக்யா இது பற்றி கண்டுகொள்ளாமல் அமைதியாக இருக்கிறாள். இந்த ப்ரமோ தற்போது வைரலாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment