/tamil-ie/media/media_files/uploads/2021/07/Baakiyalakshmi-2.jpg)
Tamil Serial Baakiyalakshhmi Serial : பாக்யாவை டிரைவிங் கிளாஸ் அழைத்து வரும் எழில், டிரைவிங் சொல்லி தருபவரிடம் இன்னைக்கு ஒருநாள் அம்மாவுக்கு நான் சொல்லி கொடுக்கவா என கேட்க அவரும், சரி என்று சொல்கிறார். அப்போது பாக்யா இங்க பிரச்சனை இல்லைடா. மெயின்ல ஓட்டும் போது பயமா இருக்கும்லடா என் கேட்க, அதெல்லாம் எப்பவும் பயப்பட கூடாது அம்மா. தைரியமா ஓட்டு என்று சொல்லிவிட்டு, அவளை வண்டி ஓட்ட சொல்கிறான்.
பாக்யாவும் அவன் சொன்னபடி வண்டி ஓட்டுகிறாள். சூப்பர் அம்மா, என சொல்ல பாக்யாவும், நீ என்கூட இருந்தா, என்னால எல்லாமே பண்ண முடியும்ன்னு நம்பிக்கை வருதுடா என சொல்கிறாள். இதன்பிறகு வீட்டில், பாக்யா ஆர்டருக்கான வேலையில் இறங்குகிறார். அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, எல்லாம் ரெடி ஆகிருச்சா என்று கேட்கிறார்
மேலும் இது கோபி பிரெண்ட்டோட வீட்டு ஆர்டர். நல்லா இருக்கணும் பாக்யா. நியாபகம் இருக்குல என சொல்கிறாள். அதெல்லாம் நல்லா பண்ணிருவேன் என்கிறாள் பாக்யா. சாப்பாடு செய்து முடித்துவிட்டு சாப்பிட்டு பார்க்கும் ஜெனி கஸ்தூரி இருவரும் ரொம்ப நல்லாருக்கு என்று சொல்கின்றனர். அதன்பிறகு அனைத்தையும் பேக் செய்து வைக்கிறார்கள்.
அப்போது ராதிகா வீட்டிற்கு வரும் கோபி, அவன் ப்ரண்டு வீட்டு நிகழ்ச்சிக்கு கூப்பிடுகிறான். ஆனால் அவள் உங்க பிரெண்ட் வீட்டு பங்கஷனுக்கு நான் எதுக்கு என கேட்கிறாள். அப்போது கோபி உன் ப்ரண்டு பர்த்டே பக்ஷனுக் நான் வந்தேன் இப்போ நீ வான எனறு சொல்கிறான். அதற்கு ராதிகா நீங்க என்மேல கேர் எடுத்து பார்க்குறதுனால, மயூ அவளை விட்டு நான் விலகி போறதாய் நினைக்கிறாள் என சொல்கிறாள.
அதற்கு கோபி, உனக்கே தெரியும் நான் மயூ மேல எவ்வளவு பாசம் வைச்சு இருக்கேன்னு. நான் உன்னையும், மயூவையும் எப்பவும் வேற வேறயா பார்க்கல என சொல்லும்போது இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.