Baakiyalakshmi Serial Today Episode : சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அளித்து வருகின்றனர். அதிலும் குடும்ப உறவுகளை மையமாக வைத்து வெளியாகும் சீரியல்கள் ரசிகர்கள்மனதில் நீங்க இடம் பிடித்து வருகிறது. அந்த வகையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலுக்கு மக்கள் மனதில் அதிக வரவெற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடந்த்து என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வீட்டின் முன்பு வந்து நிற்கும் ராதிகாவின் கணவர் ராஜேஷிடம் பேசும், எழிலிடம் கோபி பற்றிய அனைத்து விஷயங்களையும் கூறுகிறார். ராதிகா உடன் அவர் இருக்கும் போட்டோவை காட்டி திட்டுகிறார். மேலும் இது எல்லாத்தையும் நிறுத்த சொல்லு. இல்லை என்றால் மீண்டும் வருவேன், வீட்டில் இருக்கும் அனைவரிடமும் சொல்வேன். உங்களுக்கு நிம்மதி இல்லாமல் செய்வேன். இந்த போட்டோவை பேனர் அடித்து வீட்டில் முன்பு வைப்பேன் என சொல்லிவிட்டு சொல்கிறார்.
இதனால் அதிர்ச்சியடையும் எழில், இது குறித்து தனது அப்பா கோபியிடம் கேட்க, நேராக அவரது அறைக்கு செல்கிறார். எழில் வருவதை பார்த்த கோபி, இப்படியே கேட்காமல் உள்ளே வருவாய் என சொல்லி திட்டுகிறார். இதை பொருட்படுத்தாத எழில், 'நல்லவன் மாதிரி நடிக்காதே' என கூறுகிறார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட, கோபத்தில் எழிலை கோபி அடிக்க வருகிறார். ஆனால் அதை தடுக்கும் எழில் அவரை திட்ட தொடங்குகிறார்.
ஒரு நபர் வந்து அவரது மனைவி உடன் நீங்கள் நெருக்கமாக இருக்கும் போட்டோவை காட்டிவிட்டு போகிறார். அவரை கூட்டிவந்து அனைவரிடமும் சொல்ல வைக்க எவ்வளவு நேரம் ஆகி இருக்கும். நீங்கள் எவ்வளவு தூரம் திட்டினாலும் நீங்கள் வேறு பெண்ணை பார்க்க மாட்டீர்கள் என்பதை அம்மா நூறு முறையாவது என்னிடம் சொல்லி இருப்பார்கள். ஆனால் இது தெரிந்தால் என்ன ஆகும் என கேட்கிறார்.
அம்மா ஆசையாக செய்த மசாலா பிசினெஸை செய்யவிடாமல் என்னவெல்லாம் பேசினீர்கள். ஆனால் நீங்கள் மட்டும் வெளியில் சென்று இப்படி நடக்கிறீர்கள். அதனால் கீழே வந்து அம்மா இனி மசாலா பிசினெஸ் செய்யலாம் என சொல்லிவிட்டு, நடந்ததற்கு மன்னிப்பு கேளுங்கள் என கூறுகிறான். அதன் பின் கீழே வரும் கோபி பாக்யாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு நீ இனியாவை பார்த்துக்கொண்டு தான் இருந்தாய். நான் அப்போது கோபத்தில் அப்படி செய்துவிட்டேன். இப்போது அமர்ந்து யோசித்தபோது தான் எனக்கு புரிந்தது.
நீ பிசினெஸ் மூட வேண்டாம், தொடர்ந்து நடத்து என சொல்கிறார். இதை கேட்டு மற்றவர்களே ஆச்சர்யம் அடைகின்றனர். 'எவ்ளோ பெரிய நடிகன்டா..' என எழில் அவரை பார்த்து ஆச்சர்யம் அடைகிறார். இதெல்லாம் கனவா இல்லை நிஜமா என கேட்கும் அளவுக்கு மகிழ்ச்சி அடைகிறார் பாக்யா. அத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil