Baakiyalakshmi Serial Today Episode Update : இனியாவை கூப்பிடுவதற்காக கோபி காத்திருக்கும்போது, ராதிகாவின் கணவர் ராஜேஷ், ஸ்கூல் முடித்து வரும் மயூவை கூப்பிடுகிறான. ஆனால் வரமாட்டேன் என் அடம் பிடிக்கும் மயூ உங்களை பார்த்தா பயமா இருக்கு என சொல்கிறாள். அதற்கு ராஜேஷ் அப்படி எல்லாம் ஒன்னும் இல்லம்மா. அந்த கோபி வர்றது எனக்கு பிடிக்கலை. உனக்காக தான்மா நான் சண்டை போடுறேன். என சொல்லி கூப்பிடுகிறாள்
மயூ வர மாட்டேன் என சொல்லும் போது அவளை வலுக்கட்டாயமாக காரில் ஏற்ற பார்க்கிறான். அப்போது கோபியை பார்த்துவிடும் மயூ, அங்கிள் என கத்துகிறாள். அப்போது வரும் கோபி ராஜேஷிடம் சண்டை போட, ராஜேஷ், அவ என்னோட பொண்ணுடா என சொல்லி கோபியை கீழே பிடித்து தள்ளுகிறான். அதற்குள் ஆட்கள் எல்லாம் கூடிவிடுகின்றனர். அப்போது ஸ்கூலை சேர்ந்தவர்கள் போலீசுக்கு போன் பண்ணி வர சொல்கிறார்கள்.
தொடர்ந்து அங்கு வரும் போலீஸாரிடம், என்னை என் அம்மாகிட்ட இருந்து இவர் பிரிக்க பார்க்குறாரு என ராஜேஷை சொல்கிறாள். இதற்கிடையில் ஸ்கூல் முடித்து வெளியே வரும் இனியா, பாக்யாவிற்கு போன் பண்ணி இன்னும் தன்னை யாரும் கூப்பிட வரவில்லை என சொல்கிறாள். அப்போது பாக்யா கோபிக்கு போன் பண்ண, அவன் போனை கட் பண்ணுகிறான். இதனால் பாக்யா இனியாவை அங்கயே வெயிட் பண்ண சொல்கிறாள்.
இதற்கிடையில் மயூ பிரச்சினை குறித்து தெரிந்துகொண்ட ராதிகாவும் ஸ்கூலுக்கு வந்து சேர்கிறாள். போலீசிடம், எனக்கும் இவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நாங்க பிரிஞ்சு ரொம்ப வருஷம் ஆச்சு. குழந்தை முன்னாடி தேவையில்லாதது எல்லாம் பேசுறாரு என சொல்கிறாள். அப்போது ராதிகாவுக்கு ஆறுதல் சொல்லும் கோபி, அவனுக்கு தெரிஞ்ச போலீசை தனியாக கூப்பிட்டு பேசுகிறான்.
இதனிடையில் ஆட்டோவில் ஜெனியுடன் ஸ்கூலுக்கு வரும் பாக்யா பாக்யா, இனியாவிடம் செல்கின்றனர். அதற்குள் போலீஸ் ராஜேஷை ஜீப்பில் ஏற்றி கொண்டு செல்கிறான். அதன்பின்னர் பாக்யா, ஜெனி, இனியா மூவரையும் பார்த்துவிடும் கோபி, அவசரமாக ராதிகா, மயூ இருவரையும் அழைத்து கொண்டு கிளம்பும்போது இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil