Tamil Serial Baakiyalakshmi Update : ஸ்கூலில் சிறந்த அம்மா என்று பரிசு வாங்கிய பாக்யா அதை செல்வியிடம் காட்டிவிட்டு தன்னுடைய கழுத்தில் மாட்டிக்கொள்கிறாள். அப்போது சமையல் கட்டுக்கு வரும்இனியா அதனை பார்த்துவிட்டு தாத்தா பாட்டியிடம் சொல்லி சிரித்துக்கொண்டிருக்கிறாள். அப்போது பாக்யா கழுத்தில் மெடலுடன் அனைவருக்கும் காபி கொடுக்க வருகிறாள். அப்போது, அவளை அனைவரும் கிண்டல் பண்ணி சிரித்து கொண்டிருக்கின்றனர்.
அதன்பின்னர் காலையில் தூங்கி எழுந்திருக்கும் ஜெனி, தலை சுற்றுவதாகவும், வாந்தி வருவதாகவும் செழியனிடம் சொல்கிறாள். சாப்பாடு சரியில்லாம வாமிட் எடுத்துவிட்டாயா என்று கேட்கும் செழியன் அம்மாவை கூப்பிடுவதாக சொல்கிறான். அப்போது ஜெனி தான் கர்ப்பமாக இருப்பதாக சோல்கிறள் இதை கேட்டு ஷாக்காகும் செழியன், நீ இப்போதான் ஆபிஸ் போக ஆரம்பிச்சு இருக்க. இப்போதைக்கு குழந்தை எல்லாம் வேண்டாம் என்கிறான்.
அதனை தொடர்ந்து அவன் டெஸ்ட் கிட் வாங்கி வந்து ஜெனியிடம் கொடுக்க அவளும் டெஸ்ட் செய்து பார்க்கிறாள். அப்போது டெஸ்ட்டில் பாசிட்டிவ் வரவும் ஜெனி சந்தோஷப்படுகிறாள். ஆனால் செழியன் நம்ம ஒரு தடவை டாக்டர் கிட்ட காண்பிச்சு கன்பார்ம் பண்ணிட்டு, அடுத்து என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்லாம் என சொல்கிறான். அப்போது ஜெனியை தேடி மேலே வரும் பாக்யா ஜெனி ஒரு மாதிரியாக இருப்பதை பார்த்து என்னவென்று விசாரிக்கிறாள்.
அவளிடம் ஜெனிக்கு உடம்பு சரியில்லை என சொல்லி சமாளிக்கிறான் செழியன். அவள் கீழே வந்து சத்தியமூர்த்தி, ஈஸ்வரியிடம் சொல்லிவிட்டு ஜெனிக்காக சாப்பாடு தயார் செய்ய போகிறாள். அப்போது செல்வி என்னவென்று கேட்க, ஜெனி ஒரே வாந்தி எடுத்துட்டு இருக்கா. அவளுக்கு தான் சாப்பாட்டு செய்றேன் என சொல்ல, ஜெனி மாசமா இருக்குது போல. நானும் ரெண்டு நாளா ஜெனியை பார்க்குறேன். நீ வேணா அவகிட்ட கேட்டு பாரு என சொல்கிறாள் அதைப்பற்றி பாக்யா யோசிக்க அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil