/tamil-ie/media/media_files/uploads/2021/05/Baakia.jpg)
அமிர்தாவிடம் பேசிக்கொண்டிருக்கும் எழில், உங்களுக்கு கல்யாணம் ஆன விஷயத்தை ஏன் இவ்வளவு நாளா சொல்லல என கேட்கிறான். இதை கேட்டு அமிர்தால் அதிர்ச்சியில் நிற்கிறாள். உங்க அப்பா வந்து இந்த விஷயத்தை சொன்னப்போ ஒரு மாதிரி ஆகிருச்சு. இவுங்க ஏன் நம்மகிட்ட இதை மறைச்சாங்கன்னு கஷ்டமா இருந்ததுங்க என சொல்கிறான். இதை கேட்டு அதிர்ச்சியில் இருக்கும் அமிர்தா ஒரு கட்டத்தில் மயக்கமடைகிறாள். அவளை பிடித்துக்கொண்டு சோபாவில் உட்கார வைக்கிறான்.
அப்போது மயக்கத்தில் இருந்து எந்திரிக்கும் அமிர்தா, எங்கப்பா இப்படியா சொன்னாரு என கேட்க, அவர் உங்க அப்பாவே இல்லை, மாமானாருன்னு சொன்னாரு என எழில் மீண்டும் ஷாக் கொடுக்கிறான். மேலும் அவரோட மகனை நீங்க கல்யாணம் பண்ணதா, நான் உங்க கூட பேச கூடாதுன்னும் சொன்னதாகவும் கூறுகிறான். தொடர்ந்து ஏன் என்கிட்ட இதெல்லாம் மறைச்சுங்க உண்மைய சொல்லுங்க என கேட்கிறான்.
அப்போது தன்னுடைய திருணமன வாழ்க்கை குறித்து சொல்லும், அமிர்தா தனது பெற்றோர்கள் பதினெட்டு வயதிலே கல்யாணத்துக்கு முடிவு செய்த்தாகவும், தான் வேண்டாம் சொன்னபோது, தனது இரண்டு தங்கச்சிகளை வைத்து எமோஷனலாக பேசி கல்யாணத்திற்கு சம்மதம் தெரிவிக்க சொன்னதாகவும், அதன்பிறகுதான் இந்த திருமணம் நடைபெற்றதாகவும் கூறுகிறாள். இதனையடுத்து முதலிரவில் அவளது கணவன், தன்னை பிடிக்கவில்லையா என்று கேட்கிறான்.
நான் இப்போதான் உங்களை பார்க்கிறேன் என அமிர்தா சொல்ல, பயப்படாத நான் உன்னை ஒன்னும் பண்ண மாட்டேன் என சொல்கிறான். தொடர்ந்து அவளிடம் அவன் அன்பாக நடந்து கொள்கிறாள். அவளுடைய பிறந்தநாள் நெருங்கிய சமயத்தில் அவளிடம்வரும்போது, உனக்கு என்ன பிடிக்கும் என கேட்கிறான். அப்போது அமிர்தா எனக்கு ஒரு ஆசை இருக்கு கேட்கவா என்கிறாள்.
அந்த சயமத்தில் கணேசனுக்கு ஆக்ஸிடென்ட் ஆனது குறித்து போன் மூலம் செய்தி வருகிறது. இதையெல்லாம் கேட்கும் எழில், அமிர்தாவிடம் மன்னிப்பு கேட்கிறான். மேலும் இவ்வளவு நடந்ததுக்கு அப்புறம், சென்னை வந்து படிச்சு வேலை பார்த்துட்டு இருக்கீங்க. உங்க இடத்துல நான் இருந்தா, இதெல்லாம் பண்ணுவேனா தெரியலை. ரொம்ப பெரிய விஷயம்ங்க என எழில் சொல்கிறான் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுற்றது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.