/tamil-ie/media/media_files/uploads/2021/07/Baakiyalakshmi.jpg)
baakiyalakshmi Serial Update Today : கிரஹபிரவேசத்தை நம்ம தனியாக நடத்தி விட்டு, அப்புறம் ஒருநாள் அவுங்கள வீட்டுக்கு கூப்பிட்டு விருந்து வச்சுடலாம் என ராதிகாவிடம் கோபி சொல்கிறான். ஆனால் ராதிகா அதெல்லாம் பிரச்சனை இல்லை நம்ம எல்லாம் சேர்ந்தே பண்ணலாம் என சொல்ல, கண்டிப்பா பாக்யா சித்தி, இனியா அக்கா எல்லாரும் வரணும் என மயூவும் கூறுகிறாள். இதற்கிடையில் ஈஸ்வரி தன் கணவரிடம், மதுரையில் கோபி நடந்து கொண்ட விதத்தை பற்றி கூறுகிறாள்.
இதறகிடையே பாக்யா, நான் ராதிகா மேடம் வீடு வரை போயிட்டு வர்றேன். நமக்காக ரெண்டு தடவை கிரஹபிரவேசத்தை தள்ளி வைச்சு இருக்காங்க என சொல்லிவிட்டு எழிலுடன் கிளம்புகிறார். அதன்பின்னர் தன்னிடம் பேசவரும் ஜெனியிடம், எல்லாமே உன்னால தான் நடந்துச்சு. என் குடும்பத்துட்ட இருந்து என்னை பிரிச்சுட்டீலா என கத்துகிறான். இப்போது அங்கு வருமு ஈஸ்வரி,
அவனை தனியான கூட்டிச்சென்று, விவரத்தை கேட்கிறாள். அதற்கு செழியன், நான் வீடு வாங்கிட்டு உங்ககிட்ட எல்லாம் சொல்லலாம்ன்னு இருந்தேன். என பொய் சொல்கிறான். அவன் சொல்வதை நம்பி விடு பார்த்துக்கலாம் என சொல்கிறான்.
இதற்கிடையில் ராதிகா வீட்டிற்கு வரும் பாக்யா, ரெண்டு தடவை எங்களால கிரஹபிரவேசம் தள்ளி போயிருச்சு சாரி என சொல்கிறாள். அப்போது ராதிகா, நாளைக்கு தேதி நல்லா இருக்குன்னு அம்மா சொன்னாங்க. நாளைக்கே பால் காய்ச்சிடலாமா என கேட்கிறாள். பாக்யாவும் ஏற்கனவே எல்லாம் ஏற்பாடு பண்ணி வைச்சது தான. நாளைக்கே நம்ம கிரஹபிரவேசத்தை வைச்சுடலாம் என சொல்கிறாள்.
அப்போது ராதிகா கோபி வாங்கி வந்த ஸ்நாக்ஸ்களை பாக்யா, எழில் இருவருக்கும் கொடுக்கிறாள். அதை சாப்பிட்டு பார்த்துவிட்டு நம்ம வீட்ல இருக்க ஸ்நாக்ஸ் மாதிரியே டேஸ்டாக இருக்கு என எழில் சொல்ல, என் பிரண்டு மதுரையில இருந்து வாங்கிட்டு வந்தாரு. ரெண்டு பேரும் ஒரே கடையில கூட வாங்கி இருக்கலாம் என சொல்கிறாள். அதன்பிறகு பாக்யாவும், எழிலும் வீட்டிற்கு கிளம்பும்போது இன்றைய எபிசோடு முடிகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.