விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கோபிக்கு விட்ட சவாலில் பாக்யா ஜெயிப்பாரா மாட்டாரா என்று எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இதனிடையே இன்றைய எபிசோட்டில்,
சமையல் ஆர்டர் மூலமாக கிடைத்த பணத்தை வைத்துக்கொண்டு மீதி பணத்திற்கு என்ன செய்வது என்று தெரியாமல் பாக்யா விழித்துக்கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் எழில் 2 நாட்களாக வீட்டில் காணவே இல்லையே என பாக்யா விசாரிக்க, ஏதோ ஷுட்டிங் போயிருப்பதாக் சொல்கிறாள் அமிர்தா. அப்போது அங்கு வரும் எழில், பழனிச்சாமி சார் சொன்ன ஒரு தயாரிப்பாளர் விளம்பர ஷுட்டிங் கொடுத்து இருக்காரு அதுல அங்கே போயிட்டேன். இன்னும் இரண்டு நாள் இப்படித்தான் இருக்கும் என சொல்கிறாள்.
அதனைத் தொடர்ந்து ஏன்டா இவ்வளவு கஷ்டப்படுற என பாக்யா கேட்க, இதுக்காக தான் அம்மா என்று சொல்லும் எழில், பையில் இருந்து ஐந்து லட்சம் பணத்தை கொடுக்கிறான். இந்த பணத்தை உன்கிட்ட இருக்க பணத்தோடு சேர்த்து வைம்மா. இன்னும் ரெண்டு நாள் மட்டும் சமாளிச்சுட்டா போதும். மீதி பணமும் கைக்கு கிடைச்சுடும். அதை அந்தாளுக்கிட்ட கொடுத்து வீட்டை வாங்கிடலாம் என சொல்கிறான்.
இதை கேட்டு பாக்யா இன்ப அதிர்ச்சியடைந்தாலும், எனக்காக நீ ஏன்டா கஷ்டப்படனும் இதை நீயே வைச்சுக்கோ என சொல்கிறாள். ஆனாலும் எழில் நான் உன் பையன்ம்மா. உன்ன கஷ்டப்படுத்திட்டு நான் ஒதுங்கி இருக்கனுமா என சொல்லி பணத்தை கொடுக்கிறேன். இதை பார்த்த ஜெனி, செழியனுக்கு போன் செய்து பணத்தை பற்றி விசாரிக்க, அடுத்து செழியனும் வந்து ஐந்து லட்சம் பணத்தை கொடுக்கிறான்.
அவன் கொடுப்பதையும் முதலில் வாங்க மறுக்கும், பாக்யா வேண்டாம் என்று சொல்ல, செழியன், நியாயப்படி பார்த்தா முழு பணத்தையும் நானே உனக்கு கொடுத்து இருக்கணும். ஆனா கொடுக்க முடியலை. நீ சவால்ல ஜெயிக்கணும்மா என சொல்லி பணத்தை கொடுக்கிறான். அந்த பணத்தை வாங்கும் பாக்யா மகிழ்ச்சியில், பார்த்தீங்களா மாமா என் மொத்த குடும்பமும் என் பக்கம் நிற்குது என சொல்லி கண் கலங்கி அழுகிறாள்.
இந்த விஷயம் எதுவுமே தெரியாமல் கோபியும், ராதிகாவும் வந்து பாக்யாவை கிண்டல் செய்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பணத்தை ரெடி பண்ணிட்டீங்களா மேடம். இன்னும் ஒரு நாள் தான் இருக்கு என்று சொல்லும் கோபி, இவளால பதினெட்டு ஆயிரம் கூட கொடுக்க முடியாது என திமிராக பேசுகின்றனர். நீங்க பேசி முடிங்க. அதுக்கப்புறம் நான் பேசுறேன் என கெத்தாக நிற்கிறார் பாக்யா, அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“