என்ன பாக்கியா இதெல்லாம்… கோபி இத கண்டுகலயா… மருமகளுடன் ஆட்டம் போடும் மாமியார்

சொன்னபடி பாக்யா வீட்டை வாங்குவரா அல்லது கோபி அந்த வீட்டை வேறு ஆளுக்கு விற்குவிடுவரா?

என்ன பாக்கியா இதெல்லாம்… கோபி இத கண்டுகலயா… மருமகளுடன் ஆட்டம் போடும் மாமியார்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் நடிகை சுசித்ரா மற்றும் ரித்திகா தமிழ்ச்செல்வி இருவரும் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதை தக்க வைத்துக்கொள்ள அவ்வப்போது சீரியல்களில் பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக மாறியுள்ளது.

தொடக்கத்தில் சரியான வரவேற்பு இல்லை என்றாலும், தற்போது பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் இந்த சீரியலில், கோபி, பாக்யாவை விட்டு பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு பாக்யாவின் வீட்டுக்கு அருகிலேயே குடி வந்த அவர், தற்போது பாக்யா தங்கியிருக்கும் வீடு என் பெயரில் உள்ளது வீட்டை விற்க போகிறேன் என்று கூறினார்.

இந்த வீட்டை வாங்குவதற்காக, எழில் வர்ஷினியை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்க கடைசி நேரத்தில் விஷயத்தை தெரிந்துகொண்ட பாக்யா திருமணத்தை நிறுத்தி எழல் அமிர்தா திருமணத்தை நடத்தி வைத்துவிட்டார். இதனால் பாட்டி கோபமான இருந்து வரும் நிலையில், சொத்து முழுவதும் எழுதி வைத்தாலும் வீ்ட்டுக்கு இன்னும் 20 லட்சம் பணம் வேண்டும் என்று சொல்கிறார் கோபி.

இந்த பணத்தை நான் தருகிறேன் என்று ஏற்றுக்கொள்ளும் பாக்யா அடுத்து என்ன செய்ய போகிறார் என்பது குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாக்கியலட்சுமி சீரியலின் தினசரி எபிசோடுகள் பரபரப்பின் உச்சமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், சொன்னபடி பாக்யா வீட்டை வாங்குவரா அல்லது கோபி அந்த வீட்டை வேறு ஆளுக்கு விற்குவிடுவரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் நடிகை ரித்திகா தமிழ் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மாலை தோம்தோம் என்ற பாடலுக்கு பாக்யா கேரக்டரில் நடித்து வரும் சுசித்தா ரித்திகா இருவரும் உற்சாகமாக நடனமாடியுள்ளனர். இந்த வீடியா பதிவு இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இந்த டான்ஸ் கோபிக்கு தெரியுமா என்று ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Tamil serial baakiyalakshmi suchithra and rithika dance reels viral

Exit mobile version