கோபியை தேடி போன இனியா: அதிர்ச்சியில் பாக்யா; ஈஸ்வரி சபதம் ஜெயிக்குமா?

பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் திருமணத்தால், ஈஸ்வரி கோபி பாக்யா இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், கோபியை பார்க்க இனியா புறப்பட்டுள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில், இனியாவின் திருமணத்தால், ஈஸ்வரி கோபி பாக்யா இடையே மோதல் வெடித்துள்ள நிலையில், கோபியை பார்க்க இனியா புறப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
Baakiyalskhmi April 01

பாக்கியலட்சுமி சீரியலில், தற்போது இனியாவின் திருமணம் குறித்ததான கதை நகர்ந்து வரும் அதே வேளையில் கடுமையாக விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இதனிடையே இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் ஈஸ்வரி, வீட்டில் உட்கார்ந்து புலம்பிக்கொண்டிருக்க, செழியன் அங்கு வருகிறான். இப்போ தானே போன உடனே வந்துட்ட என்று கேட்க, அப்பாதான் வர சொன்னார் பாட்டி என்று செழியன் சொல்ல, கோபி சந்தோஷமாக வீட்டுக்கு வருகிறான். இதை பார்த்த செழியன் என்னப்பா விஷயம் என்று கேட்க, இதை எப்படி சொல்வது என்றே தெரியவில்லை. உங்களுக்கு ஒரு பெரிய குட் நியூஸ் இருக்கு என்று சொல்கிறான்.

இதை கேட்ட ஈஸ்வரி என்ன விஷயம் என்று கேட்க, நான் உனக்கு ஒரு லிங்க் அனுப்பினேனே அதை செக் பண்ணியா என்று கேட்க, செக் பண்ணேன்பா, அவர் பெரிய பணக்காரர் லிஸ்டில் இருக்கிறார் என்று செழியன் சொல்கிறான். அதன்பிறகு அவங்களோட சேர்ந்து எதாவது பிஸினஸ் பண்ண போறீங்களாப்பா என்று கேட்க, இல்லை என்று சொல்லும் கோபி, சுதாகர் பையன் இனியா மீது ஆசைப்படுவதாகவும், திருமணம் செய்துகொள்ள கேட்டதையும் சொல்கிறான்.

மேலும் உங்களை கேட்காமல் சம்மதம் சொல்லிவிட்டு வந்ததாக சொல்ல, நீ சம்மதம் சொல்லாமல் வந்திருந்தால் தான் கோபப்பட்டிருப்பேன் என்று ஈஸ்வரி சொல்ல, இந்த கல்யாணத்திற்கு அம்மா சம்மதிப்பாங்களா என்று கேட்க, நாமதான் பேசி சம்மதிக்க வைக்க வேண்டும் என்று ஈஸ்வரி சொல்கிறாள். மறுநாள் காலையில் ஈஸ்வரி செழியன், கோபி மூவரும் வீட்டுக்கு வந்து பாக்யாவிடம் பேச, இனியாவுக்கு இப்போது கல்யாணம் வேண்டாம். அவள் மேல படிக்க வேண்டும் என்று பாக்யா சொல்கிறாள்.

Advertisment
Advertisements

இதை கேட்ட ஈஸ்வரி இனிமேல் உன்கிட்ட இனியா கல்யாணம் பற்றி பேச மாட்டோம். அவளுக்கு கல்யாணம் பண்ணத்தான் போறோம் அதை சொல்லத்தான் வந்தோம் என்று சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். பிறகு கோபி இனியாவை சந்தித்து சுதாகர் பையன் போட்டோவை காட்ட, அவள் இப்போது கல்யாணம் பண்ண விருப்பம் இல்லை. நான் மேல படிக்கனும் என்று சொல்லிவிட்டு கிளம்புகிறாள். வீட்டுக்கு வந்து கோபி சந்தித்து கல்யாணம் பற்றி பேசியது குறித்து பாக்யாவிடம் இனியா சொல்கிறான்.

அப்போது அங்கு வரும் செழியன் அப்பா எத்தனை இடத்தில் உனக்கு சப்போர்ட்டா இருந்திருக்கார். அவர்ட்ட இப்படித்தான் பேசுவியா? நீ பேசியதால் அவருக்கு, திரும்பவும் உடம்பு சரியில்லை என்று சொல்ல, இதனால் அதிர்ச்சியாகும் இனியா, அப்பா இப்போ எப்படி இருக்காரு? நான் உடனே அவரை பார்க்க வேண்டும் என்று சொல்ல, பாக்யா அதிர்ச்சியாகிறார். அத்துடன் எபிசோடு முடிகிறது. 

Baakiyalakshmi

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: