பாக்கியலட்சுமி சீரியலில் மாரடைப்பு ஏற்பட்டு கோபி மருத்துவமனையில் இருப்பது தெரிந்து ராதிகா அங்கு வர, அவரை ஈஸ்வரி திட்டிவிட்ட நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், ரூம் கண்ணாடி வழியாக, ராதிகா கோபியை பார்த்துக்கொண்டிருக்க, அங்கு வரும் ஈஸ்வரி, நீ இன்னும் போகலையா? என் பிள்ளை உயிருடன் இருப்பது உனக்கு பிடிக்கவில்லையா? நீ எப்போ எங்க குடும்பத்திற்குள் வந்தியோ அப்போவே, எங்க குடும்பம் நாசமா போய்டுச்சி என்று சொல்லி சராமாரியாக திட்டி தீர்க்கிறார்.
அந்த நேரத்தில் மருந்து வாங்க வேண்டும் என்று நர்ஸ் சீட்டை கொடுக்க, அதை வாங்க போகும் ராதிகா, கோபியின் உடல்நிலை குறித்து விசாரிக்கிறார். இதை கேட்ட டாக்டர் விசிட்டர்ஸ்க்கு எல்லாம் நிலைமை என்னனு சொல்ல முடியாது. அவங்க குடும்பத்திற்கு சொல்லியாச்சு என்று சொல்கிறார். அந்த நேரத்தில் நர்ஸ் மருந்து சீட்டை கொடுக்க போக, டாக்டர் கோபியின் மனைவியிடம் கொடுங்க என்று பாக்யாவை காட்டுகிறார்.
இதை பார்த்து அதிர்ச்சியாகும் ராதிகா, பாக்யா அவருடைய மனைவியின்னு சொன்னாங்களா என்று கேட்க, ஆமாம் என்று சொல்லும் டாக்டர், நடந்ததை சொல்கிறார். அந்த நேரத்தில் மருந்து சீட்டை வாங்கு பாக்யா என்று ஈஸ்வரி சொல்கிறார். இதனால் ஆத்திரமான ராதிகா தனியாக நின்று அழுதுகொண்டிருக்க, அப்போது அங்கு வரும் ஈஸ்வரி, கோபியை பார்த்துக்கொள்ள நாங்கள் இருக்கிறோம் நீ வீட்டுக்கு கிளம்பு என்று சொல்கிறார்.
இதனால் அழுதுகொண்டே வெளியில் வரும் ராதிகாவுக்கு ஆறுதல் சொல்ல பாக்யா வருகிறார். அதை புரிந்துகொள்ளாத ராதிகா, நீங்க எல்லாரும் சேர்ந்துட்டீங்க, நான் தனிமரமா நிற்கிறேன் என்று சொல்லி அழுகிறார். அப்போது பாக்யா நடந்ததை சொல்ல போகும்போது, நீங்க இருந்து எல்லாம் பார்த்துக்கோங்க, எதும் என்றால் எனக்கு சொல்லுங்க என்று சொல்லிவிட்டு ராதிகா கிளம்புகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“