பாக்கியலட்சுமி சீரியல் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், வீட்டில் அனைவரிடமும் பேசிக்கொண்டிருக்கும் கோபி, பாக்யாவுக்கு நிறைய கெடுதல் செய்துவிட்டேன் என்று ஃபீல் பண்ணி பேசிக்கொண்டிருக்கிறார். அதன்பிறகு என் அப்பாவுக்கு இறுதிச்சடங்கு செய்ய கூடாது என்று ஏன் சொன்னீங்க என்று அம்மாவிடம் கேட்க, அதெல்லாம் அப்போ நடந்தது. உன் அப்பா ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்தேன் என்று ஈஸவரி சமாளிக்கிறார்.
அடுத்து பாக்யா வாக்கிங்போக, கோபி, பாக்யா வாங்கிங் போய்விட்டால், இனியாவுக்கு யார் சாப்பாடு கொடுப்பார் என்று கேட்க, பாக்யா சாப்பாடு செய்து வைத்துவிட்டு தான் வாக்கிங் போவாள். அவள் எப்போது எழுந்திருப்பாள் எப்போது தூங்குகிறாள் என்று யாருக்கும் தெரியாது. ஜெனிக்கு சத்தான சாப்பாடு கொடுப்பா, பாக்யா ஒரு அதிசய பிறவி என்று, பாக்யா பற்றி ஈஸ்வரி பெருமையாக பேசிக்கொண்டு இருக்கிறார்.
அதன்பிறகு ராதிகா கோபியை பார்க்க பாக்யா வீட்டுக்கு வருகிறார். ஆனால் ஈஸ்வரி ராதிகாவை உள்ளே விடாத நிலையில், ராதிகா அவங்க கணவனை பார்க்க வந்திருக்கிறார். உங்க பையன் அவர் கழுத்தில் தாலி கட்டி இருக்கிறார், அவரது கணவனை பார்க்க அவர் எப்போது வேண்டுமானாலும் இங்கு வரலாம் என்று சொல்ல, ராதிகா கோபியை பார்க்க செல்கிறார். ஆனால் கோபி தூங்கிக்கொண்டிருப்பதால், அங்கிருந்து கிளம்புகிறார்.
அப்போது ஈஸ்வரி இனிமேல் கோபியை பார்க்க இங்கு வர கூடாது என்று சொல்கிறார். பிறகு ரூமில், கோபி தண்ணீர் கேட்க, ஈஸ்வரி தனக்கு காது கேட்காதது போல் தூங்கிக்கொண்டு நடிக்கிறார். கோபியின் சத்தம் அதிகமாக இருக்க, வேறு வழி இல்லாமல் பாக்யா கோபிக்கு தண்ணீர் கொடுக்க, நீ என் உயிரை காப்பாற்றியதற்கு நன்றி, நீ வரவே மாட்டே என்று நினைத்தேன் என் கோபி பேசிக்கொண்டு இருக்க, ஈஸ்வரி இதை கேட்டு சந்தோஷப்படுகிறார்.
ஈஸ்வரி ஒளிந்துகொண்டு இருப்பதை செல்வி பார்த்துவிட, ரூமில் இருந்து வெளியில் வரும் பாக்யாவும், ஈஸ்வரி அங்கு நிற்பதை பார்த்து சந்தேகமடைகிறார். அடுத்ததாக வாக்கிங் போகும்போது, ஈஸ்வரி உன்னையுமு் கோபி சாரையும் சேர்த்து வைக்க ப்ளான் போடுவதாக செல்வி, பாக்யாவிடம் சொல்ல, பாக்யா அதிர்ச்சியடைகிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“