விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த சீரியலின் இன்றைய எபிசோடு குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
பாக்யா வீட்டில் கிச்சனில் வேலை செய்துகொண்டிருக்கும்போது கோபியை வைத்து செல்வி பாக்யாவை கிண்டல் செய்கிறாள். அப்போது எழில் அமிர்தா இருவரும் வீட்டிற்கு வர, அனைவரும் அவர்களுடன் மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது பாக்யா, என்ன திடீரென்று வந்திருக்க என்று எழிலிடம் கேட்க, நான் தான் வர சொன்னேன் என்று ஈஸ்வரி சொல்கிறார்.
ஈஸ்வரி சொன்னதை கேட்டு பாக்யா குழப்பத்தில் இருக்க, எழில் இனி இந்த வீட்டில் தான் இருக்கப்போகிறான். அதற்காகத்தான் வர சொன்னேன் என்று ஈஸ்வரி சொல்கிறாள். இதை கேட்ட பாக்யா, அதெல்லாம் முடியாது. எழில் அவன் கனவுகளை நிறைவேற்றிவிட்டு இந்த வீட்டுக்கு வருவான், இந்த வீட்டில் இருந்தால், அவனிடம் குழந்தை பற்றி கேட்பீங்க அவனுக்கு அவன் கனவு தான் முக்கியம் என்று சொல்கிறாள்.
இதை கேட்ட கோபி, ஏன் எழில் இந்த வீட்டில் இருந்தே, கனவை நிறைவேற்றலாமே, இத்தனை நான் எல்லோரும் பிரிஞ்சு இருந்தாச்சு இனியாவது ஒன்றாக இருக்கலாமே என்று சொல்ல, என் குடும்ப விஷயத்தில் உங்களை தலையிட கூடாது என்று சொன்னேன், நீங்க எப்படி பேசலாம் என்று பாக்யா கேட்க, நான் என்ன சொன்னாலும், திமிரா எதிர்த்து பேசனும்னு நினைச்சிட்டு இருக்கியா பாக்யா என்று ஈஸ்வரி கோபப்படுகிறாள்.
இதை கேட்ட எழில், எனக்கு என் அம்மாவின் லட்சியம் தான் முக்கியம். நான் என்னுடைய கனவை நிறைவேற்றிவிட்டு, அம்மாவின் சவாலையும் நிறைவேற்றுவேன். அதன்பிறகு இந்த வீட்டில் சந்தோஷமாக இருப்பேன். அதுவரைக்கும் யாரும் என்னை தொந்தரவு செய்ய வேண்டாம். நீங்க இதற்கு தான் போன் பண்ணீங்கனு தெரிஞ்சிருந்தா நான் வந்திருக்கவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு கிளம்பி போகிறான்.
அடுத்து கோபி ஈஸ்வரி நடவடிக்கை குறித்து பாக்யாவிடம் செல்வி, ஜெனி இருவரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். அதன்பிறகு கோபி, ராதிகாவுக்கு போன் செய்து விஷயங்களை சொல்லிவிட்டு, திரும்பவும் தனக்கு நெஞ்சுவலி வந்ததை சொல்ல, ராதிகா பயப்படுகிறாள். அடுத்து ராதிகா பாக்யா வீ்ட்டுக்கு வர, கோபியும் இனியாவும் பேசிக்கொண்டிருக்கின்றனர். ராதிகாவை பார்த்ததும் இனியா கோபப்பட, ராதிகா அதை கண்டுகொள்ளாமல் கோபியிடம் நலம் விசாரிக்கிறாள்.
அதன்பிறகு, நாளைக்கு மயூ பிறந்த நாள் அது ஞாபகம் இருக்கிறதா என்று கேட்க, மறந்தே போய்விட்டேன். நாளைக்கு கண்டிப்பாக வீ்ட்டுக்கு வருகிறேன் என்று கோபி சொல்ல, உங்களை அனுப்ப முடியாது டாடி என்று இனியா சொல்கிறாள். இதை கேட்டு ராதிகாவும் அதிர்ச்சியடைய, அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.