பாக்யாவுக்கு எதிராக சதி செய்து, இப்போது அவரது வீட்டிலேயே தஞ்சம் அடைந்துள்ள கோபி, ராதிகாவை டீலில் விட்ட நிலையில், பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், தனது நண்பனிடம் பேசும் கோபி, பாக்யா தன்னை நன்றாக கவனித்துக்கொண்டாள், ஹாஸ்பிட்டலில் எனக்காக காந்திருந்தால், இவ்வளவு நாள் இவளை பற்றி புரிந்துகாள்ளாமல், பிரச்னை மேல் பிரச்னை கொடுத்தேன், இனி பாக்யாவுக்கு எந்த பிரச்னையும் வராது. உடல்நிலை சரியாகும் வரை இங்கு தான் இருப்பேன் அதன்பிறகு ராதிகா வீட்டுக்கு போய்விடுவேன் என்று சொல்கிறான்.
இதை கேட்ட கோபியின் நண்பன், சந்தோஷப்பட, மறுபக்கம், ராதிகா, என்னுடைய வாழ்க்கையில் இனி கோபி வேண்டாம் எனக்கு என் பிள்ளை மயூ இருக்கிறாள் என்று எல்லாம் பேக் செய்து வைத்துக்கொண்டு, சொல்ல, கமலா, நீ அவசரப்படாதே, நீ இந்த வீட்டை விட்டு போகிறேன் என்று சொன்னதால் மாப்பிள்ளை ரொம்ப கஷ்டப்படுகிறார். நாம இங்கிருந்து போய்ட்டா, அவர் ஒரேடியா அங்கேயே போய்விடுவார் என்று சொன்னாலும், ராதிகா தன் முடிவில் உறுதியாக இருக்கிறாள்.
அதன்பிறகு பாக்யா வீ்ட்டில் இனியா டான்ஸ் காம்படிஷனுக்கு போக ரெடியாகிறாள். அப்போது கோவிலுக்கு போய்விட்டு வரும் பாக்யா, இனியாவுக்கு திருநீறு வைக்கிறாள். அதன்பிறகு எல்லோரும் இனியா டான்ஸ் காம்படிஷனுக்கு போக வேண்டும் என்று சொல்ல, நீங்கள் முன்னாடி போங்க, நான் கொஞ்சம் வேலை இருக்கு அதை முடித்துவிட்டு வருகிறேன் என்று சொல்கிறாள். இதை கேட்ட கோபி நான் வரேனுதானே நீ வரல, நான் கேப் புக் பண்ணி வருகிறேன் நீ போ என்று சொல்கிறான்.
இதை கண்டுகொள்ளாத பாக்யா, சென்றுவிட, இனியா காம்படிஷனுக்கு தாயராகி நிற்கும்போது பதற்றமாக இருக்கிறாள். அப்போது அவளிடம் சென்ற கோபி, ஆறுதல் சொல்லி, மோட்டிவேஷன் செய்துவிட்டு வருகிறான். இதை பார்த்து கண் கலங்கும் ஈஸ்வரி, இனியாவுக்கும் கோபிக்கும் இடையே பாசம் அதிகம். ஆனால் நடுவில் இந்த ராதிகா வரவே கூடாது என்று சொல்லிக்கொண்டு இருக்கிறாள், அதன்பிறகு டான்ஸ் காம்டிஷன் நடக்க, இனியா டான்ஸை பார்த்து அவளை எல்லோரும் உற்சாகப்படுத்துகின்றனர். அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“