பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், ஈஸ்வரி கோபி, இனியா, செழியன் ஆகிய மூவருக்கும் சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருக்கும்போது இனியா கல்யாணத்தை கிராண்ட பண்ணிடு கோபி, அதுவரைக்கும் நான் இருக்க மாட்டேன் என்று சொல்ல, அதற்கு கோபி, நீங்க, இனியா குழந்தையின் கல்யாணத்தை கூட பார்ப்பீங்க என்று சொல்கிறான். அதன்பிறகு அனைவரும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கின்றனர்.
மறுபக்கத்தில், பாக்யா கிச்சனில் சமைத்துக்கொண்டு இருக்கும்போது, ஜெனி செல்வி ஆகியோர் பேசிக்கொண்டு இருக்கின்றனர். அப்போது இனியாவின் ஸ்டேட்டஸை பார்த்தீங்களா என்று ஜெனி கேட்க, இல்லையே போன் அங்கு இருக்கு என்று பாக்யா சொல்ல, ஜெனி தனது போனிலேயே அந்த ஸ்டேடஸை காட்டுகிறாள். அதில் கோபிக்கு ஈஸ்வரி சாப்பாடு ஊட்டிக்கொண்டு இருக்கிறாள். இதை பார்த்த பாக்ய டென்ஷன் உச்சத்திற்கு சென்றுவிடுகிறாள்.
இவங்க அலும்பல் தாங்க முடியல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி என் பையனே இல்லை என்று சொன்னாங்க, இந்த இனியாவும், செழியனும், அவர் பண்ணது எல்லாமே தப்பு என்று சொல்லிக்கொண்டு இருந்தாங்க இப்போ எல்லாமே தலைகீழா மாறிவிட்டது என்று சொல்கிறாள் பாக்யா. இதே மாதிரி பண்ணிட்டு இருக்காங்க, இவரும் லீவுக்கு பாட்டி வீட்டுக்கு வந்த மாதிரி, கொஞ்சம் கூட பொறுப்பே இல்லா இருக்காங்க, ராதிகாவை பத்தி கொஞ்சம் கூட யோசிக்கவே இல்லை என்று சொல்கிறாள்.
ராதிகாவும் இவரை பார்க்க ஒவ்வொரு முறையும் வந்து அவமானப்பட்டு போகிறார். இவர் வந்தாலும் இவங்க அவரை பார்க்க விடமாட்டாங்க என்று சொல்ல, அதேபோல் அந்த மயூவும் பாவம் ஹாஸ்பிடலில் அவரை பார்க்க வந்து, உள்ள வரவே பயப்படுறா, என்று பாக்யா சொல்லிக்கொண்டு இருக்க, இதை பார்த்த செல்வி, எதுக்காக ராதிகாவுக்கு சப்போர்ட் பண்ற, அவங்க உன் வாழ்க்கையை பறிச்சிக்கிட்டு போனவங்க தானே என்று சொல்ல, யாரும் யாரோட வாழ்க்கையையும் பறிக்கல என்று பாக்யா சொல்கிறாள்.
மறுபக்கம் ராதிகா வீட்டில் எல்லா பொருட்களையும் எடுத்து வைத்துக்கொண்டு இருக்கிறாள். ராதிகாவின் அம்மா வந்து, கண்டிப்பா வீட்டை காலி செய்து தான் ஆகனுமா என்று கேட்க, உடனே ராதிகா போனை எடுத்து காட்டுகிறாள். அதில், ஈஸ்வரி கோபிக்கு சாப்பாடு ஊட்டிவிடுகிறாள். அதை பார்த்து கமலா கோவப்பட, இதுவரைக்கும் இப்படி ஒரு சிரிப்பை அவரிடம் பார்த்ததே இல்லை. 2 மாசத்திற்கு முன்னாடி கூட எங்க அம்மா தான் என்னுடைய எதிரி என்று சொல்லிக்கொண்டு இருந்தார். ஆனா இப்போ அவங்களோட சேர்ந்து கூத்தடிச்சிட்டு இருக்காரு என்று சொல்கிறாள்.
இதை கேட்ட கமலா, இப்போ நம்ம வீட்டை விட்டு போக கூடாது, நாம் எதற்காக மாப்பிள்ளையை விட்டுக்கொடுக்கனும், இங்கேயே இருந்து ஒரு போலீஸ் கம்ளைண்ட் கொடுத்து மாப்பிள்ளையை இங்கு கூட்டி வரலாம் என்று சொல்ல, ராதிகா வேண்டாம் என்று சொல்கிறாள். மறுநாள் காலை கோவிலுக்கு கோபியை கூட்டிச்செல்லும் ஈஸ்வரி, அவன் பெயரில் அர்ச்சனை செய்துவிட்டு, நீ இனிமேல் என் கூடத்தான் இருக்கனும், உனக்கு எதாவது ஒன்னு ஆச்சுனா என்னால் தாங்க முடியாது.
உன் அப்பாக்கிட்ட போற வரைக்கும் என் கூடத்தான் இருக்கணும், என்றுநு சொல்ல, நான் உங்க கூடத்தான் இருப்பேன் என்று கோபி சொல்ல, வாய் வார்த்தையாக சொன்னால் நல்லா இருக்காது, சத்தியம் பண்ணிக்கொடு என்று சொல்ல, கோபி அதிர்ச்சியாக, இனியாவும், செழியனும் சத்தியம் பண்ணி கொடுங்கப்பா என்று சொல்ல, அதன்பிறகு கோபி, சத்தியம் பண்ணிக்கொடுக்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.