விஜய் டிவியின் கார்த்திகை தீபம் சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில். இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், கோபி, இனியா, செழியன், ஈஸ்வரி ஆகிய 4 பேரும், காரில் சென்றுகொண்டிருக்க, பாதி வழியில் காபி சாப்பிட்டுவிட்டு போகலாம் என்று காரை நிறுத்துகின்றனர். அப்போது செழியனும் இனியாவும் காபி வாங்க செல்கின்றனர். அப்போது ஈஸ்வரி கோபியிடம், செண்டிமெண்டாக பேசுகிறாள். நீ எங்களோடவே இருந்துடு கோபி. உங்க அப்பா நீயும் பாக்யாவும் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார்.
நான் அவரிடம் பலமுறை உன்னை நினைத்து அழுது இருக்கிறேன். நீ இல்லாமல் வீடு வீடாக இல்லை. அவரது ஆசை நிராசையாக மாறி அவர் இறந்துவிட்டார். நானும் அப்படி போய்விடுவேன் என்று தோன்றுகிறது என்று சொல்ல, அப்படியெல்லாம் பேசாதீங்கம்மா, நான் உங்களை விட்டு எங்கும் செல்ல மாட்டேன் என்று கோபி சொல்ல, நீ திரும்பவும், பாக்யா மற்றும் உன் குழந்தைகளுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று ஈஸ்வரி சொல்ல, கோபி அமைதியாக இருக்கிறான்.
அதன்பிறகு 4 பேரும் வீட்டுக்கு வர, அவர்களை வரவேற்கும் பாக்யா, காபி போட, 4 பேருக்கும் காபி போடு என்று ஈஸ்வரி சொல்கிறார். இதற்கு கோபி வேண்டாம் என்று சொல்ல, பாக்யா, 4 பேருக்கும் காபி கொடுக்கிறாள். இதை பார்த்து ஈஸ்வரி சந்தோஷப்பட, பாக்யா, உங்களிடம் தனியாக பேச வேண்டும் என்று கோபியை அழைக்க ஈஸ்வரி, போய் பேசிட்டுவா என்று சந்தோஷமாக அனுப்பி வைக்கிறாள். தனியாக சென்ற கோபியிடம், நீங்க கோவிலுக்கு போனதை ராதிகாவிடம் சொன்னீங்களா என்று கேட்கிறாள்.
மெசேஜ் பண்ணேன், அவள் ஒன்றும் சொல்லவில்லை. ஆபீஸ் வேலையாக பிஸியாக இருந்திருப்பாள் என்று கோபி சொல்ல, ஆம்மாம் ஒற்றை ஆளாக அந்த வீட்டை காலி செய்வது கொஞ்சம் சிரமம் தான். ராதிகா உடைந்து போய் இருக்கிறார். அவரது வாழ்க்கையே தொலைந்துவிட்டது போல் பேசுகிறாள். இன்னும் கொஞ்ச நேரத்தில் அவங்க இங்கிருந்து கிளம்பிடுவாங்க, இப்போ பார்க்கவில்லை என்றால், இனி எப்போவுமே பார்க்க முடியாது, இப்போவும் அம்மா பேச்சை கேட்டால் உங்களை விட சுயநலவாதி யாரும் இல்லை.
ஒருவேளை ராதிகா உடல்நிலை சரியில்லாமல், அவங்க அம்மா வீட்டுக்கு சென்றிருந்தால், நீங்கள் அங்கு போகும்போது, அவர்கள் உங்களை பார்க்க விடவில்லை என்றால் என்ன சொல்வீங்க என்று பாக்யா கேட்க, தாலி கட்டிய புருஷன் நான் என்னை எப்படி பார்க்க கூடாது என்று அவர்கள் சொல்வார்கள் என்று கேட்க, அதே நிலைமை தான் இங்கு நடந்தது என்று, ராதிகா வந்தபோது ஈஸ்வரி நடந்துகொண்ட விதத்தை பற்றி சொல்கிறாள் பாக்யா. இதை கேட்ட கோபி எனக்கு புரிய வச்சதுக்கு தேங்ஸ், என்று சொல்ல, நான் ராதிகாவுக்காக தான் பேசினேன் என்று சொல்கிறாள்.
அதன்பிறகு வெளியில் வந்த பாக்யாவிடம், என்ன பேசுனீங்க என்று ஈஸ்வரியும் இனியாவும் கேட்க, அதை அவரே வந்து சொல்வார் என்று சொல்கிறாள். அதன்பிறகு வெளியில் வரும் கோபி, நான் ராதிகாவை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கிளம்ப, ஈஸ்வரி பாக்யாவிடம், நீதான் அவனது மனசை மாத்துனீயா என்று கேட்க, கோபியை அனுப்ப முடியாது என்று ஈஸ்வரியும் இனியாவும் சண்டை போடுகின்றனர். இதை பார்த்த பாக்யா இனியாவை திட்ட, பாக்யா சொன்னது தான் சரி என்று கோபி ராதிகாவை பார்க்க செல்கிறான் அத்துடன் எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.