விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வரும் நிலையில், ஈஸ்வரி – ராமமூர்த்தி தம்பதி தனது சொந்த மகன், கோபியை தள்ளி வைத்துவிட்டு பாக்யாவை தூக்கி வைத்து கொண்டாடுவதால் கோபி கடுமையாக கோபத்தில் இருக்கிறார்.
கணவன் கைவிட்ட ஒரு இல்லத்தரசியின் வாழ்க்கை பேராட்டத்தை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாக்கியலட்சுமி. பாக்யா, கோபி, ராதிகா ஆகிய 3 கேரக்டருக்கு இடையே நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து கதை நகர்ந்து வரும் இந்த சீரியலில், கோபி பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு ராதிகாவை திருமணம் செய்துகொண்டார்
கோபி சென்றபின் தனியாக குடும்பத்தை கவனிக்க தொடங்கிய பாக்யா, ரெஸ்டாரண்ட் வைத்து குடும்பத்தை பார்த்துக்கொள்கிறார். இடையில், மகன்கள் மற்றும் மகளின் பிரச்சனையை சாதுர்யமாக தீர்த்த பாக்யா, அவ்வப்போது கோபியிடம் இருந்து வரும் தொல்லைகளையும் சமாளித்து வருகிறார். இடையில், தனது மாமியார் ஈஸ்வரி மீது ராதிகா பொய்யான கம்லைண்ட் கொடுக்க, அதில் அவரை அவரை மீட்டு வந்தார் பாக்யா.
அதனைத் தொடர்ந்து இனியா ஒரு சிக்கலில் சிக்க, அவரை ராதிகா காப்பாற்றியிருந்தார். தன்மீது ராதிகா கம்லைண்ட் கொடுத்ததற்கு கோபி தான் காரணம் என்று நினைத்த ஈஸ்வரி மகனை தலைமூழ்கிவிட்டதாக கூறி அதிர்ச்சி அளித்த நிலையில், இன்றைய எபிசோட்டில், ராமமூர்த்தியின் 80-வது பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கு அழையா விருந்தாளியாக என்ட்ரி கொடுத்துள்ளார் கோபி.
கோபி வந்தவுடன், சாரி முன்பே வந்திருக்க வேண்டும். கொஞ்சம் லேட் ஆகிடுச்சி என்று சொல்ல, கோபமான ராமமூர்த்தி இவனை யார் இங்கு அழைத்தது என்று கேட்க, கோபி ஷாக் ஆகிறார். இதை பார்த்த செழியன் நான் அவரை அழைக்கவில்லை என்று சொல்கிறான். ஈஸ்வரியும் கோபியை பிடிக்காத மாதிரி கண்டபடி திட்டி அசிங்கப்படுத்துகிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒரு பக்கம் ராதிகா கோபியை மதிக்காத நிலையில், இங்கு மகன் மீது உயிராக இருந்த ஈஸ்வரியும் தற்போது கோபியை வெறுத்துவிட்டதால், தற்போது கோபி தனிமரமாக நிற்கிறார். இதனால் பாக்கியலட்சுமி சீரியல் குிறத்து எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“