விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று (டிசம்பர் 14) என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில் கோபியை பார்க்க ராதிகா வந்திருக்க, கோபியோ தனது அம்மா மற்றும் பிள்ளைகள் குறித்து பேசிக்கொண்டிருக்கிறார். மேலும் நான் இன்னும் கொஞ்சநாள் இங்கு இருந்துவிட்டு வருகிறேன் என்று சொல்ல, ஏன் அந்த வீட்டில் நிம்மதி கிடைக்காதா? உங்களை நான் கவனிக்கமாட்டேனா என்று ராதிகா கோபியிடம் கேட்கிறாள்.
இதை கேட்ட கோபி, நீ பிஸியா இருப்ப, ஆனா இங்கு எல்லோருமே என்னை விழுந்து விழுந்து கவனித்துக்கொள்கிறார்கள். பாக்யா எனக்கு சமைத்து போடுகிறாள். அவளை பற்றி தெரியாமல் அவளை அழிக்க வேண்டும் என்று, பலமுறை முயற்சித்தேன். நீ எத்தனையோ தடவை அவளுக்காக சப்போர்ட் பண்ண, ஆனா நான் புரிஞ்சிக்கல, இப்போதான் பாக்யா பற்றி நன்றாக புரிந்துகொண்டேன் என்று பெருமையாக பேசுகிறான்.
இதை கேட்டு கடுப்பாகும் ராதிகா கோபமாக அங்கிருந்து கிளம்ப, அப்போது பாக்யாவை பார்த்துவிட்டு முறைத்துக்கொண்டே செல்கிறாள். கோபி ராதிகா பேசிக்கொண்டிருப்பதை பார்த்து கடுப்பான ஈஸ்வரி, ராதிகா வெளியில் வரும்போது இனிமேல் நீ கோபியை பார்க்க இங்கே வர கூடாது என்று சொல்கிறாள். நீ இங்க வரது கோபிக்கே பிடிக்கல. அவன் இப்போதான் பாக்யகிட்ட நல்லா பேசிட்டு இருக்கான் என்று சொல்கிறாள்.
மேலும் அவனுக்கு இந்த வீட்டில் இருப்பது தான் பிடித்திருக்கிறது. அதனால் நீ அவனை விவாகரத்து செய்துவிடு அவன் குடும்பத்தோடு நிம்மதியாக இருக்கடடும் என்று சொல்ல, ராதிகா மேலும் கோபமாகிறாள். ஆனாலும் எதுவும் பேசாமல் சென்றுவிடுகிறாள். இதன் பிறகு கோபி தனது அம்மா ஈஸ்வரியோடு பேசிக்கொண்டிருக்க அப்போது செழியன் வெளியில் போய்ட்டு வருகிறான். அப்போது எனக்கு வேலை கிடைச்சிருக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க என்று காலில் விழுகிறான்.
ஒன்றும் புரியாத ஈஸ்வரி நீதான் இப்போ வேலைக்கு போய்ட்டு இருக்கியே அப்புறம் என்ன என்று கேட்க, எனக்கு வேலை எப்போதோ போய்விட்டது. சொன்னால் நீங்கள் கஷட்டப்படுவீங்கனு சொல்லல, இது அப்பாவுக்கு தெரியும் என்று செழியன் சொல்கிறான். அதன்பிறகு இவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருக்க, இனியா இங்கு வந்து பேசுகிறாள். அப்போது செழியன் இனியாவிடம் வேலை குறித்து சொல்லாமல் சமாளித்து விடுகிறான்.
அந்த நேரத்தில் வீட்டுக்கு வரும் பாக்யா எல்லோரிடமும் சாப்பிட்டாச்சா என்று கேட்டுவிட்டு கோபியிடம் மட்டும் கேட்காமல் போகிறாள். அதன்பிறகு சாப்பிட்டுவிட்டு சமைக்க தொடங்குகிறாள். கோபி தனது பிள்ளைகள் மற்றும் அம்மாவிடம் பேசிக்கொண்டிருப்பதை பார்க்கும் பாக்யா, ராதிகாவிடம் ஈஸ்வரி நடந்துகொண்டவிதம், ராதிகா தன்னை முறைத்துக்கொண்டு போனதை நினைத்து பார்க்கிறாள். இதனால் கோபியிடம் தனியாக பேச வேண்டும் என்று சொல்லி அழைக்கிறாள்
கோபிக்கு பிடித்த பிளாக் காபி போட்டு கொடுக்கும் பாக்யா, எப்போ நீங்க ராதிகா வீட்டுக்கு போக போறீங்க, உங்களால் பக்கத்தில் இருக்கிறவங்க எல்லாருடைய பேச்சையும் கேட்க முடியல.எங்களை எல்லாம் வேண்டாம் என்று விட்டுட்டு போனவங்க தானே? இப்போ அதேபோல ராதிகாவையும் விட்டுவிட்டு இங்கே இருக்கலாம்னு யோசிக்கிறீங்களா? என்று கேட்க, கோபி பதில் எதுவும் சொல்ல முடியாமல் இருக்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.