/tamil-ie/media/media_files/uploads/2023/06/Baakiyalakshmi-6.jpg)
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் தினந்தோறும் பல அதிரடி திருப்பங்களுடன் அரங்கேறி வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
மாலினி செழியனிடம் தனது விருப்பதை சொல்ல இது சரியாக வராது என்று சொல்லி செழியன் போதை தடுமாற்றத்துடன் அங்கிருந்து புறப்படுகிறான். அதன்பிறகு ராதிகாவும் மயூவும் ரூமில் பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது போன் செய்யும் ராதிகாவின் அம்மா பாண்டிச்சேரி திருமணம் குறித்து ஞாபகப்படுத்துகிறாள். அப்போது கோபி அங்கு வருகிறார்.
அப்போது ராதிகா தனது உறவுக்காரர் திருமணம் பாண்டிச்சேரியில் நடப்தாகவும் 3 நாட்கள் நாம் சென்றுவர வேண்டும் என்றும் சொல்கிறாள். முதலில் முடியாது என்று சொல்லும் கோபி ராதிகாவின் வற்புறுத்தலால் ஒப்புக்கொள்கிறான். இந்த பக்கம் 3 நாள் சமையல் ஆடர்காக பாக்யா பாண்டிச்சேரி கிம்பிள்கொண்டிருக்கிறாள். அப்போது இனியாவை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் நீங்கள் பத்திரமாக போய்ட்டு வாருங்கள் என்று தாத்தா சொல்கிறார்.
அப்போது எக்ஸாம் டைமில் நீ இல்லாததது வருத்தம் தான் என்று இனியா சொல்ல, இவ்வளவு பெரிய ஆர்டரை பண்ண முடியுமா என்றும், எக்ஸாம் டைமில் உன்னுடன் இல்லை என்பதும் தான் எனது கவலை என்று பாக்யா சொல்கிறாள். அதன்பிறகு டெய்லி எனக்கு கால் பண்ணி ஆல் தி பெஸ்ட் சொல்லு என்று இனியா சொல்கிறாள்.
அதன்பிறகு இரவு அனைவரும் தூங்கியபிறகு செழியன் குடித்துவிட்டு வருகிறான். கதவை திறக்கும் பாக்யா செழியன் குடித்திருப்பதை பார்த்து ஷாக் ஆகிறாள். நேத்து தானே குடிக்க கூடாது என்று சொன்னேன் என்று பாக்யா சொல்ல செழியன் பாக்யாவின் தோல்மேல் சாய்ந்து அழுகிறான். அதன்பிறகு இனிமேல் குடிக்க கூடாது என்று செழியனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு பாக்யா அனுப்புகிறாள்.
அடுத்த நாள் காலை கோபி ராதிகா இருவரும் பாண்டிச்சேரிக்கு கிளம்புகிறார்கள். அப்போது மயூ பாட்டியுடன் தங்க சொல்லி அழைத்து செல்கிறார்கள். அடுத்து சாமிக்கு பூஜை செய்யும் ஈஸ்வரி பாக்யாவுக்கு ஆசீர்வாதம் செய்ய பாக்யாவும் பாண்டிச்சேரிக்கு கிளம்புகிறாள். அத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.