ராதிகா கொடுத்த சப்போர்ட்... கோபிக்கு பாக்யா கொடுத்த பதிலடி : அடுத்த என்ன நடக்கும்?

மாமா பெண்ஷன் பணம் இருக்கு அது போக எழில் செழியன் சம்பாதிக்கிறாங்க அவங்க வீட்டை பார்த்துக்கொள்வார்கள் என்று ஈஸ்வரி சொல்ல, நானும் எனது பங்கை கொடுக்கிறேன் என்று ராதிகா சொல்கிறார்.

மாமா பெண்ஷன் பணம் இருக்கு அது போக எழில் செழியன் சம்பாதிக்கிறாங்க அவங்க வீட்டை பார்த்துக்கொள்வார்கள் என்று ஈஸ்வரி சொல்ல, நானும் எனது பங்கை கொடுக்கிறேன் என்று ராதிகா சொல்கிறார்.

author-image
WebDesk
New Update
Gopy Radhika Baakiyal.

பாக்கியலட்சுமி சீரியல்

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், வீழ்ச்சியின் பாதையில் உள்ள பாக்யா எழுச்சி பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Advertisment

இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், இனியாவை ஷாப்பிங் கூட்டிக்கிட்டு போனதற்காக ராதிகாவுக்கு கோபி நன்றி சொல்ல, அப்போது பாக்யா வீட்டுக்கு வருகிறார். அப்போது பாக்யா மீது கோபத்தில் இருக்கும் இனியாவை சமாதானப்படுத்த முயற்சிக்க, நீ என்னை மறந்துட்ட, ஈவினிங் ஷாப்பிங் போகனும்னு சொன்ன இப்போ உனக்கு என் ஞாபகமே வரலையா என்று திட்டுகிறாள். இனியாவின் பேச்சை கேட்ட எழில் அம்மா என்ன மனநிலையில் இருக்காங்க தெரியுமா என்று இனியாவை திட்டுகிறான்.

இந்த சத்தம் கேட்டு எல்லோம் ஹாலுக்கு வருகின்றனர். அப்போது கேண்டீன் பற்றி அமிர்தா விசாரிக்க, குளுக்கல் முறையில் காண்ட்ராக்ட் வேறு ஒருவருக்கு போய்விட்டதாக பாக்யா சொல்கிறார். இதை கேட்ட ஈஸ்வரி அப்போ கொடுத்த பணம் எல்லாம் போச்சா என்று கேட்க, பணத்தை கொஞ்ச நாளில் கொடுத்திடுவாங்க என்று சொல்கிறார். அதை கேட்ட ஈஸ்வரி அப்படியெல்லாம் பணம் கொடுக்க மாட்டாங் நீ ஒன்னும் பண்ண வேண்டாம் வீட்லயே இரு.

மாமா பெண்ஷன் பணம் இருக்கு அது போக எழில் செழியன் சம்பாதிக்கிறாங்க அவங்க வீட்டை பார்த்துக்கொள்வார்கள் என்று ஈஸ்வரி சொல்ல, நானும் எனது பங்கை கொடுக்கிறேன் என்று ராதிகா சொல்கிறார். இதனால் கோபமான பாக்யா யாரும் பணம் கொடுக்க வேண்டாம். நானே வீட்டை பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லிருக்கேன்ல அப்படியே பாத்துக்கிறேன் என்று கோபமாக சொல்லிவிட்டு போய் தனியாக நின்று யோசித்துக்கொண்டிருக்கிறார். அப்போது கோபி பாக்யாவை பார்த்து நக்கலாக பேசுகிறார்.

Advertisment
Advertisements

இதற்கு பதிலடி கொடுக்கும் பாக்யா இப்படியே இருந்திட மாட்டேன் இதில் இருந்து மீண்டு வருவேன் என்று கோபியிடம் சவால் விட்டுவிட்டு போகிறார். இதை தொடர்ந்து, செல்வியிடம் பேசிக்கொண்டிருக்கும் பாக்யா இந்த ஆர்டர் நமக்கே வந்து சேரும்னு தோணுது என்று சொல்ல, நீ நினைச்ச மாதிரியே நடக்கும் அக்கா என்று செல்வியும் ஆறுதலாக பேசுகிறார். இரவு தூங்குவதற்காக ரூமுக்கு வரும் கோபி ராதிகாவுடன் பேசிக்கொண்டிருக்க, அப்போது ஈஸ்வரி அங்கு வர ராதிகா வழக்கம்போல் கீழே படுத்துக்கொள்கிறார்.

அப்போது கோபியிடம் பாக்யா முன்னமாதிரி இல்ல, அவ செய்யுறது எல்லாம் தப்பா இருக்கு. அவளால் எல்லோருக்கும் பிரச்சனை வந்துட்டு இருக்கு என்று சொல்ல, ராதிகா கோபமாகிறார் அத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: