விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஈஸ்வரிக்கு தண்டனை கிடைக்குமா என்பது குறித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடு தொடக்கத்தில், எனக்கு ராதிகாவை பிடிக்காது, அவர்கள் திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் குழந்தையை கொல்லும் அளவுக்கு, நான் கொடூரமானவ கிடையாது என்று அழுதுகொண்டே சொல்ல, அதை நம்பாத போலீஸ், ஒழுங்கு மரியாதையாக உண்மையை ஒத்துக்கொள் என்று லத்தியை காட்டி மிரட்டுகின்றனர்.
அடுத்து வீட்டில் ராமமூர்த்தி ஈஸ்வரியை நினைத்து புலம்பிக்கொண்டிருக்கிறார்.
அத்தை நிச்சயமாக எதுவும் செய்திருக்கமாட்டார்கள் நிச்சயமாக அதை நிரூபித்துவிட்டு அவர வெளியில் கொண்டு வந்துவிடலாம் அழாதீங்க மாமா என்று சொல்ல, அடுத்த நாள் நாளை ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர்.
பாக்யா தனது குடும்பத்துடன் ஈஸ்வரியை பார்க்க நீதிமன்றத்திற்கு வந்ததை தொடர்ந்து ராதிகா தனது அம்மாவுடன் வருகிறாள். அப்போது அங்கு வரும் கோபி, ராதிகாவும் கமலாவும் நிற்பதை பார்த்து கோபப்படுகிறான்.
அதே சமயம் பக்கத்தில் பாக்யா நிற்பதை பார்த்து எங்கே போவது என்று யோசத்துக்கொண்டிருக்கிறான் கோபி.
இதை பார்த்த கமலா பார்த்தாயா இப்பகூட நம்ம பக்கத்தில் அவர் வரவில்லை. பாக்யாவிடம் செல்வதா இல்லை நம்மிடம் வரவா என்று யோசித்துக்கொண்டிருக்கிறார் என்று ராதிகாவை மேலும் ஏற்றிவிடுகிறாள். அதன்பிறகு ஈஸ்வரி கோர்ட்டுக்கு வர ராமமூர்த்தி அழுது புலம்புகிறார். அவரை எல்லோரும் சமாதானப்படுத்த, நீதிமன்றத்தில் கேஸ் விசாரணைக்கு வருகிறது.
நீதிமன்றத்தில் ஈஸ்வரியிடம், கோபி ராதிகாவை திருமணம் செய்தது உங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் மகனை அழைத்துக்கொண்டு உங்கள் வீட்டுக்கு சென்றுவிட்டீர்கள். இந்த குழந்தை உருவானதும் உங்களுக்கு பிடிக்கவில்லை. அதனால் பலநாட்கள் திட்டமிட்டு அந்த குழந்தையை கொன்றுவிட்டீர்கள் என்று சொல்ல, நான் குழந்தையை கொல்லவில்லை என்று ஈஸ்வரி அழுது புலம்புகிறாள்.
அதற்கு ஏற்றார்போல், ராதிகா கமலா இருவரும் ஈஸ்வரிதான் ராதிகாவை தள்ளிவிட்டதாக சாட்சி சொல்கின்றனர். இதில் கமலா ஒரு படி மேலே சென்று இவர் ராதிகாவை பிடித்து தள்ளியதை நான் ரெண்டு கண்ணால் பார்த்தேன் என்று சொல்லி அனைவருக்கும் ஷாக் கொடுக்கிறாள். அதன்பிறகு பாக்யா கூண்டில் ஏற அவரிடம் விவாகரத்துக்கு பிறகும் ஏன் இவர்களுடன் இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்.
அதற்கு பாக்யாவிவாகரத்து ஆகிவிட்டால் மற்ற உறவுகள் முறிந்து போகுமா? என்று பதில் சொல்ல, உங்கள் முன்னாள் மாமியார் ராதிகாவை பிடித்து தள்ளியிருப்பாரா என்று கேட்க, நிச்சயமாக இல்லை என்று பாக்யா சொல்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“