/indian-express-tamil/media/media_files/7EQvVKjQLKC4HwSydmaN.jpg)
பாக்கியலட்சுமி சீரியலில் கோபி மீண்டும் கமலாவை திட்டியதால் கோபமான அவர், போலீஸ் ஸ்டேஷனில் ஈஸ்வரி மீது புகார் கொடுக்க ஈஸ்வரியை தேடி போலீஸ் பாக்யா வீட்டுக்கு வந்துவிட்டது. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், தொடக்கத்தில் உங்களால் தான் இங்கு பிரச்சனை, நீங்க வருவதற்கு முன் நானும் ராதிகாவும், சந்தோஷமா இருந்தோம். நீங்க வந்தவுடன் அந்த சந்தோஷம் போய் பிரச்சனை மேல் பிரச்சனையாக வருகிறது. முதலில் நீங்கள் தான் இந்த வீட்டை விட்டு போகனும் என்று சொல்ல, என்ன சொல்வது என்று தெரியாத கமலா மீண்டும் ஈஸ்வரி குறித்து பேச கடுப்பான கோபி அடிக்க கை ஓங்குகிறார்.
நான் திரும்பி வரும்போது நீங்கள் இந்த வீட்டில் இருக்க கூடாது வீட்டை விட்டு வெளியே போய்விடுங்கள் என்று சொல்லிவிட்டு கோபி ரெஸ்டாரண்ட்டுக்கு கிளம்புகிறார். இதை கேட்டு கோபமான கமலா இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று கூறி, வீட்டில் இருந்து கிளம்பி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஈஸ்வரி பற்றி தவறுதலாக பல தகவல்களை சொல்லி, என் மகளை அவரது மகன் திருமணம் செய்தது அவருக்கு பிடிக்கவில்லை.
அவரது மூத்த மருமகளை வைத்துக்கொண்டு எனது மகளை அவரது கணவருடன் சேர்ந்து வாழ விடாமல் தடுக்கிறார், குழந்தையை அபார்ஷன் செய்ய சொல்லிக்கொண்டே இருந்தார். அதற்கு முடியாது என்று சொன்னவுடன், ராதிகாவை தள்ளிவிட்டு குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது என்று கமலா ஈஸ்வரி மீது புகார் கொடுக்க, போலீசாரும் அதை ஏற்றுக்கொள்கின்றனர்.
அடுத்து எழில் இயக்குனராகும் முயற்சியில் புதிதாக ஒரு தயாரிப்பாளரிடம் கதை சொல்ல போகிறார். வீட்டை விட்டு கிளம்பும்போது போலீஸ் வீட்டுக்கு வருகிறது. இதை பார்த்து அமிர்தா ஜெனி, எழில் என அனைவரும் அதிர்ச்சியாக, ஈஸ்வரி வீடு இதுதானா, அவங்க எங்க என்று கேட்க, என்னாச்சு எதும் பிரச்சனையா என்று கேட்கிறான். அவங்களுக்கு ஒன்றும் இல்லை அவங்க மேல கம்ளைண்ட் இருக்கு இருக்கு போலீஸ் சொல்கிறார்கள்.
அவங்க வீட்ல இல்லை கும்பகோணம் போயிருக்காங்க என்று எழில் சொல்ல, அவன் பேச்சை நம்பாமல் போலீஸ் வீட்டுக்குள் புகுந்து தேடுகின்றனர். ராதிகா குழந்தை அபார்ஷன் ஆனதுக்கு ஈஸ்வரிதான் காரணம் என்று கமலா என்பவர் கம்ளைண்ட் கொடுத்திருக்கிறார் என்று போலீஸ் சொல்ல மொத்த குடும்பமும் அதிர்ச்சியாக அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.