பாக்கியலட்சுமி சீரியலின் நேற்றைய எபிசோட்டில், ஈஸ்வரி மீது கம்ளைண்ட் கொடுத்துள்ளதாக கமலா ராதிகாவிடம சொல்ல, அதற்கு கோபப்பட்ட ராதிகாவை நான் செய்தது தான் சரி என்று, சொல்லி சமாதானப்படுத்துகிறார் கமலா. இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
போலீசார் வந்து பாக்யா வீட்டில் விசாரித்த நிலையில், ஈஸ்வரி கும்பகோணம் சென்றிருப்பதாக சொன்னார்கள். அதன்பிறகு அவர் வந்தவுடன் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர வேண்டும் என்று சொல்லிவிட்டு சென்றிருந்த நிலையில், கமலாவிடம் பேசிக்கொண்டிருக்கும் ராதிகா, ஈஸ்வரி மீது அதிக பாசம் கொண்ட கோபி இப்படி கம்ளைண்ட் கொடுத்தது தெரிந்தால் பிரச்சனையாகிவிடும். பிரச்சனையை தீர்ப்பதற்கு பதிலாக பிரச்சனையை மேலும் சிக்கலாக்கிட்டீங்க என்று அம்மாவிடம் சொல்கிறாள்.
அதன்பிறகு இரவு வீட்டுக்கு வரும்கோபி தண்ணீர் மட்டும் குடித்துவிட்டு படுக்க சென்ற நிலையில், அவருக்கு இந்த விஷயம் தெரியுமா தெரியாதா என்பதை தெரிந்துகொள்ள ராதிகா குழப்பத்துடன் தனது அறைக்குள் செல்கிறாள். அதேபோல் பாக்யா வீட்டிலும் அனைவரும் தூங்காமல் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கின்றனர். வக்கீலை சந்தித்துவிட்டு வரும் செழியன் எழில் இருவரும், இப்போதைக்கு எதுவும் செய்ய முடியாது. கைது செய்ததற்கு பிறகு எதாவது நடவடிக்கை எடுக்கலாம் என்று சொல்லிவிட்டதாக கூறுகின்றனர்.
தனது வீட்டுக்கு போகாமல் பாக்யா வீட்டிலேயே இருக்கும் செல்வி, கோபியை நம்பி போன ஈஸ்வரி அம்மாவுக்கு சரியான பாடம் கிடைத்துள்ளது. கொஞ்சம் கோபமாக பேசுவார். ஆனால் மிகவும் நல்லவர் என்று சொல்கிறார். அடுத்த நாள் காலை ஈஸ்வரி, பாக்யா ராமமூர்த்தி இனியா என அனைவரும் வீட்டுக்கு வருகின்றனர். இந்த ட்ரிப் ஜாலியாக இருந்தது என்று இனியா சொல்லிக்கொண்டு இருக்கிறாள். அதை கேட்டு ஈஸ்வரி சிரித்துக்கொண்டிருப்பதை பார்த்து பாக்யா கண்கலங்குகிறாள்.
அதன்பிறகு பாக்யாவிடம் வரும் செல்வி, பழனிச்சாமியிடம் பேசிவிட்டீர்களா என்று கேட்க, பேசிட்டேன். கைது செய்த பிறகுதான் எதுவாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க முடியும் என்று சொல்லிவிட்டதாக பாக்யா சொல்கிறாள். இதனிடையே பாக்யா வீட்டில் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாதததால், தனது வீட்டில் வெளியில் இருந்து பார்த்துக்கொண்டிருக்கும் கமலா, குழந்தையை அழித்த ஈஸ்வரி உள்ளிட்ட அனைவரும் படாத பாடுபட வேண்டும் இதன் மூலம் புத்தி வந்து கோபியும் அடங்கி இருப்பார் என்று ராதிகாவிடம் சொல்கிறாள்.
ஜாக்கிங் போய்விட்டு வரும் கோபி ராதிகா கமலா இருவரும் பாக்யா வீட்டை பார்த்துக்கொண்டிருப்பதை பார்க்கும் கோபிக்கு சந்தேகம் வருகிறது. அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“