விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பினை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் கோபிக்கு எதிராக ராதிகா பேச, இனியா ராதிகா வீட்டுக்கே வந்து குறை சொல்லிவிட்டு செல்கிறாள்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், பாக்யா வீட்டில் கோபி சண்டை போட்ட வீடியோவை, கமலா ராதிகாவிடம் காட்ட, ராதிகா கோபி மீது கோபப்டுகிறாள். அப்போது கோபி வர, இப்போ உங்களுக்கு சந்தோஷமா, நான் வெளியில் போக கூடாது என்றே இப்படி பண்றீங்களா? நீங்கள் இப்போது எப்படி இருக்கிறீர்களே அதை பார்த்து தான் உங்கள் பிள்ளைகள் வளரும் என்று சொல்கிறாள்.
மேலும் உங்களுக்கு பாக்யா மீது கோபம் இருந்தால், ரெஸ்டாரண்டில் விஷம் கலப்பீங்களா என்று கேட்க, நான் விஷயம் கலக்கவில்லை. அந்த செஃப் தான் கலந்தான் என்று கோபி சொல்ல, கமலா, மாப்பிள்ளைக்கிட்ட இப்படியா பேசுவ என்று கேட்க, இனிமேல என் முகத்திலே முழிக்காதீங்க என்று ராதிகா சொல்லிவிட்டு கிளம்புகிறாள். அதன்பிறகு இனியா காலேஜில் தனியாக உட்கார்ந்திருக்க, அங்கு வரும் நண்பர்கள் கோபி- பாக்யா சண்டை குறித்த வீடியோவை காட்டுகின்றனர்.
இந்த வீடியோவை பார்த்து இனியா அப்செட் ஆக அவளது நண்பர்கள் அவலுடன் செல்பி எடுத்துக்கொள்கின்றனர். இதனால் கடுப்பாகும் இனியா வீட்டுக்கு வந்து பாக்யாவிடம் சண்டை போட, நான் தேடி போய் சண்டை போடல அவர் தான் என்னிடம் தொடர்ந்து பிரச்னை செய்கிறார் என்று பாக்யா சொல்ல, அதை கேட்காத இனியா, மீண்டும் சண்டை போட, ஜெனி பாக்யாவுக்கு ஆதரவாக பேசுகிறாள். ஆனாலும் இனியா அதை கேட்காமல், நான் அப்பாவை பார்க்க போவதாக கோபி வீட்டுக்கு வருகிறாள்.
அங்கு, ராதிகா இனியாவை வா என்று வரவேற்க, கமலா உங்க அம்மா வேவு பார்க்க அனுப்பினாளா என்று கேட்க, எங்க அம்மா பத்தி பேச வேண்டாம். நடந்த எல்லா பிரச்னைக்கும் இவங்க தான் காரணம் என்று ராதிகாவை சொல்ல, எங்க அப்பா உங்களை கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் தான் எல்லா பிரச்னையும் நடக்குது. நீங்க இல்லாதப்போ நாங்க சந்தோஷமா இருந்தோம் என்று சொல்கிறாள். அப்போது இனியாகவை தேடி ஜெனி ராதிகா வீ்ட்டுக்கு வருகிறாள்.
அப்போது மீண்டும் கமலா பாக்யா குறித்து தவறாக பேச, ஜெனியும் ராதிகா வந்த பிறகுதான் வீ்ட்டில் சண்டை வந்தாக சொல்லிவிட்டு இனியாவை அழைத்துக்கொண்டு செல்கிறாள். இதை கேட்ட ராதிகா, இடிந்துபோய் நிற்க அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“