விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது ராதிகாவின் அம்மா கமலா கொடுத்த புகாரின் காரணமாக ஈஸ்வரியை கைது செய்ய போலீசார் வந்துள்ளனர்.
Advertisment
விஜய் டிவியின் முக்கிய சீரியல்களில் ஒன்றாக பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யாவை பிரிந்து ராதிகாவை திருமணம் செய்துகொண்ட கோபி, பாக்யாவை பழிவாங்க ஈஸ்வரியை கூட்டி வந்த கோபிக்கு, ஈஸ்வரியை சமாளிக்க முடியாமல் திணறினார். அதன்பிறகு கடந்த சில தினங்களுக்கு முன்பு, கர்ப்பமாக இருந்த ராதிகா தடுக்கி விழுந்து கர்ப்பம் கலைந்துவிட்ட நிலையில், ஈஸ்வரிதான் தள்ளிவிட்டார் என்று கூறி அவர் மீது பழி போட்டுவிட்டனர்.
இதை கேட்ட கோபியும் ஈஸ்வரியை திட்டி வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டார். இதனால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் வீட்டில் இருந்து வெளியேறிய ஈஸ்வரியை மீண்டும் தனது வீட்டுக்கே கூட்டிச்சென்ற பாக்யா, கோபி உங்களை புரிந்துகொள்வார் என்று ஆறுதல் கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்துஈஸ்வரியை ஆறுதல்படுத்துவதற்காக, அவரை கும்பகோணத்திற்கு அழைத்து சென்றுள்ள பாக்யா, ஈஸ்வரியின் நெருங்கிய தோழியை வரவழைத்து ஈஸ்வரிக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்திருந்தார்.
ஈஸ்வரி வெளியில் போனதை தாங்கிக்கொள்ள முடியாத கோபி, மீண்டும் குடிக்க தொடங்கிவிட்ட நிலையில், கடந்த வார எபிசோட்டில், பாரில் குடித்தவிட்டு சண்டை போட்டுக்கொண்டிருந்த கோபியை மீட்ட செழியன் எழில் இருவரும் கோபியை வீட்டில் வந்து விட்டுச்சென்ற நிலையில், ராதிகா அவரது அம்மா கமலா ஆகிய இருவருமே கோபி மீது கடுமையான கோபத்தில் இருக்கின்றனர். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
Advertisment
Advertisements
இதனிடையே நேற்றைய எபிசோட்டில், ராதிகாவின் அம்மா கமலா வழக்கம்போல் ஈஸ்வரி குறித்து தவறாக பேச, கடுப்பான கோபி, எங்க அம்மாவை பற்றி தவறாக பேசினீர்கள் என்றால் என்று கூறிக்கொண்டு கமலாவை அடிக்க கை ஓங்கிக்கொண்டு செல்ல, இதை பார்த்து கமலா மிரண்டுபோய் நிற்கிறார். இதை பார்த்து ராதிகாவும், கோபியை சத்தம் போடுகிறார். அதன்பிறகு ராதிகா கோபியின் சட்டையை பிடித்து எங்க அம்மாவை எப்படி நீங்கள் அடிக்க போகலாம் அவரிடம் மன்னிப்பு கேளுங்கள் என்று சொல்ல, கோபி முடியாது என்று சொல்லிவிடுகிறான்.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள ப்ரமோவில், எந்த வேலையும் இல்லாமல் குடித்துக்கொண்டிருக்கும் புருஷன், கொலை செய்ய தயங்காத மாமியார் என்று சொல்லும் கமலா, உடனடியாக காவல்நிலையத்திற்கு சென்று என் மகளை கொன்றுவிடுவார்களே என்று பயமாக இருக்கிறது என்று கம்ளைண்ட் கொடுக்க, ஈஸ்வரியை தேடி பாக்யா வீட்டுக்கு போலீஸ் வருகிறது. அத்துடன் இந்த ப்ரமோ முடிய அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“