விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், தற்போது பாக்யா மீண்டும் கோபியின் மனைவியாக மாறியுள்ளது சீரியல் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Advertisment
தமிழ் சின்னத்திரையில் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இல்லத்தரசியின் வாழ்க்கை பயணத்தை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டுள்ள இந்த சீரியல், தொடக்கத்தில் பரபரபப்பாக சென்றாலும் இடையில், தேவையில்லாத சில காட்சிகளால், கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. ஆனாலும் சமீபத்திய எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
பாக்யாவை திருமணம் செய்து 3 குழந்தைகளுக்கு அப்பாவான கோபி, பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, தனது பள்ளி தோழி ராதிகாவை திருமணம் செய்துகொண்டார். அதன்பிறகு பாக்யாவுக்கும் கோபிக்கும் இடையே மோதல் வெடித்த நிலையில், பாக்யா, சமையல் காண்டராக்ட், ரெஸ்டாரண்ட் வைத்து வாழ்க்கையில் முன்னேறிய நிலையில், அவரது முன்னேற்றத்தை பொருத்துக்கொள்ள முடியாத கோபி பல சதிகளை செய்தார்.
பாக்யாவின் ரெஸ்டாரண்டில் கெட்டுப்போன் இறைச்சியை கலந்து கெட்டபெயர் வாங்கி கொடுத்த கோபி, கடந்த சில எபிசோட்டுக்கு முன்பு பாக்யாவிடம் மாட்டிக்கொண்ட நிலையில், பாக்யா கம்ளைண்ட் கொடுத்துவிட்டார். ஆனால் பெயிலில் வந்த கோபி, மீண்டும் பாக்யாவுக்கு தொல்லை கொடுக்க, இதை சகித்துக்கொள்ளாத ராதிகா, கோபியை வெறுத்து ஒதுக்கிவிட்டார். மேலும் கோபி செய்வது தவறு என்று இனியாவே கோபிக்கு அட்வைஸ் கொடுத்தார்.
இதையெல்லாம் யோசித்த கோபி அடுத்து என்ன செய்வார் என்று யோசித்த நிலையில், தற்போது அடுத்தடுத்த எபிசோடுகளுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் திடீரென காரில் நெஞ்சுவலியால் அவதிப்படும் கோபி, பாக்யாவுக்கு போன் செய்ய, அவள் கோபியை மருத்துவமனையில் சேர்த்துவிடுகிறாள். அங்கு, நீங்கள் தானே கோபியின் மனைவி கையெழுத்து போடுங்க என்று மருத்துவமனையில் சொலகிறார்கள்.
இதை கேட்ட பாக்யா, நான் எப்படி கையெழுத்து போடுவது என்று எழிலிடம் சொல்ல, இப்போது வேறு வழியில்லை என்று எழில் சொல்கிறான். இதை கேட்ட பாக்யாவும் கையெழுத்து போட, அத்துடன் இந்த ப்ரமோ முடிவடைகிறது. இதேபோன்று கோபி ஒருமுறை விபத்தை சந்தித்தபோது, திருமணம் ஆகாமலே அவரின் மனைவி என்று ராதிகா கையெழுத்து போட்டிருந்தார். இப்போது விவாகரத்து ஆன பாக்யா, கோபியின் மனைவி என்று கையழுத்து போட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil“