/indian-express-tamil/media/media_files/ucX5eVRqsMW0j8mhl9CS.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், கமலாவும் ஈஸ்வரியும் சண்டையிட்டுக்கொள்ள, கொஞ்ச நேரம் அமைதியா இருங்கம்மா, நீங்கள் தேவையில்லாம கோபப்படுறீங்க. உங்களால் எனக்கு பிசிஸசும் போச்சு நீங்க சொன்ன மாதிரி ஒண்டிக்கட்டையா நிக்க போறேன் என்று போகி சொல்ல, இதை கேட்டு, அதிர்ச்சியான ஈஸ்வரி, என்னால் உனக்கு எந்த பிரச்சனையும் வேண்டாம் என்று சொல்கிறார்.
மேலும், உன்கூட போக வேண்டாம் என்று அந்த வீட்டில் எல்லோரும் சொன்னாங்க. ஆனா அதை கேட்காமல் நான் வந்தேன் பாரு என்னை சொல்லனும், இனிமேல் அங்கு போனால் எனக்கு மரியாதை இருக்காது. அதனால் நான் எங்கேயோ போகிறேன். அநாதை ஆசிரமத்திற்கு போகிறேன் என்று ஈஸ்வரி பெட்டியுடன் கிளம்ப, கோபி எப்படியோ பேசி தடுத்துவிடுகிறான்.
இங்கு பாக்யா, அமிர்தா மற்றும் ஜெனிக்கு வீட்டு வேலைகளை சொல்லிவிட்டு செல்ல, அப்போது எழில் மற்றும் ராமமூர்த்தி இருவரும் ரெஸ்டாரண்டில் எதாவது பிரச்சனை என்றால் சொல்லுமா என்று சொல்கின்றனர். அதன்பிறகு கோபிக்கு பிளாக் காபி கொடுக்கும் ராதிகா இந்த பிரச்சனைக்கு தீர்வு உங்க அம்மா அங்கு போறதுதான் என்றுநு சொல்ல, அதற்கு போகி முடியவே முடியாது என்று சொல்லிவிடுகிறான்.
ஈஸ்வரி ரூமில் படுத்துக்கொண்டிருக்க, கோபி அவளுக்கு காபி கொடுக்கிறான். அதை ஈஸ்வரி குடிக்க மறுத்தாலும் சமாதானம் செய்து குடிக்க வைக்கிறான. எனக்காக நகையெல்லாம் கழற்றி கொடுத்தவடா நான். ஆனால் என்னையே இப்படி சொல்லிட்டல என்று சொல்ல, இனமேல் என்ன நடந்தாலும் நான் உனக்கு போன் பண்ண மாட்டேன். என்னை அவங்க கொன்னே போட்டாலும் போன் பண்ண மாட்டேன் என்று சொல்கிறாள்.
அதன்பிறகு கமலா கோபியிடம் எதோ சொல்ல வர கடுப்பான போகி, ரெண்டு நிமிஷத்திற்கு ஒருமுறை அட்வைஸ் பண்றதை நிறுத்திக்கோங்க அத்தை என்று சொல்கிறான். பிறகு நீங்க பிஸினஸை பாருங்க இங்க எது நடந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ராதிகா சொல்ல, அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.