விஜய் டிவியின் பாக்கியலட்சமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், இன்றைய எபிசோட்டில் என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இன்றைய எபிசோட்டின் தொடக்கத்தில், காலேஜ்ஜில் என்ன நடந்தது என்ற இனியாவிடம் பாக்யா விசாரிக்க, அப்படியே விட்டுட்டாங்க ஒன்னும் நடக்கவில்லை என்று சொல்ல, பெற்றோரை கூட்டி வர வேண்டும் என்ற எதுவும் சொல்லையா என்ற கேட்க, அப்படி ஒன்னும் சொல்லலமா என்ற சொல்லும் இனியா, ரூமுக்கு வந்தவுடன் கோபிக்கு போன் செய்து, நாளைக்க நீங்க வந்துடுவீங்கல்ல என்ற கேட்கிறாள். கோபியும் கண்டிப்பாக வந்தவிடுகிறேன் என்று சொல்ல, பாக்யா பர்ததுவிடுகிறாள்.
இனியாவிடம் வந்து யார்ட பேசிட்டு இருந்த என்ற கேட்க, அவள் ஒன்றும் சொல்லாமல் இருக்கிறாள். உடனே பாக்யா இனியாவின் போனை வாங்கி பார்க்க, அப்பாவிடம் பேசிக்கொண்டு இருந்தேன் என்று இனியா சொல்கிறாள். என்ன பேசுன என்ற பாக்யா கேட்க, சும்மாதான் இப்போ நீ ஒகேவாளு கேட்டாரு அவ்வளவு தான் என்ற சொல்ல, அப்புறம் எதுக்கு நாளைக்கு வந்துடுவீங்களானு கேட்ட, அப்போ காலேஜ்லா பேரான்ஸ் வர சொல்லிருக்காகங்க நீ எங்ககிட்ட மறைச்சிருக்க என்ற கேட்கிறள்.
நீ திருந்தவே மாட்டியா, ஒரு பிரச்சனை நடந்த அதை வீட்ல சொல்லனும் இல்லாமா நீயே சால்வ் பண்றேனு போய் பெரிய பிரச்சனையாக மாத்திடுற என்று கேட்க, இனியா வழக்கம்போல் சாரி சொல்கிறாள். அதன்பிறகு இந்த பக்கம், கோபி, ராதிகாவிடம் பேச போக, அவள் முகம கொடுத்துகூட பேசாமல் இருக்கிறாள். அதன்பிறகு நாளைக்க நீ ப்ரியா, நாம இனியா பேரண்ட் மீட்டிங் போகலாம் என்ற சொல்ல, திரும்பவும் உங்க கூட வந்து என்னால் அசிங்கப்பட முடியாது என்று ராதிகா சொல்லிவிடுகிறாள்.
அடுத்த நாள் காலை பாக்யா காலேஜ்க்கு கிளம்ப, ஈஸ்வரி ராமமூர்த்தி இருவரும் நாங்களும் வருகிறோம் என்ற சொல்லி கிளம்புகிறார்கள். அங்கு கல்லூரியில் நிங்க வேலைக்க போவதால் உங்கள் பொண்ணு எப்படி போனாலும் பரவாயில்லைனு தண்ணி தெளிச்சி விட்டிங்களா என்று கேட்க, எங்க அ்ம்மா என்னை ஒழுங்கதான் வளர்த்தாங்க என்று இனியா சொல்ல, உன்னை வளர்த்த லட்சனம் தான் தெரியுதே, உங்க பொண்ணு டிசி வாங்கிட்டு போய் வேற காலேஜ்ல சேர்த்துக்கோங்க என்ற சொல்ல,இந்த ஒருமுறை மன்னித்துவிடுங்கள் என்ற பாக்யா கெஞ்ச அத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“