விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், டிஆர்பி ரேட்டிங்கிலும் முதலிடத்தை பெற்று வருகிறது.
இனியாவின் கல்லூரி ப்ராஜெக்ட் விஷயாக கேரளாவுக்கு தனது மகள் மற்றும் மாமியாருடன் சென்றுள்ள பாக்யா, இந்த பயணத்தின் போது ஏற்படும் தடைகளை சமார்த்தியமாக சமாளித்து சிறப்பாக வழி நடத்தி செல்கிறார். இடையில் கோபி இனியா மற்றும் ஈஸ்வரிக்கு போன் செய்து பல்பு வாங்கிக்கொண்டு வருகிறார்.
மறுபுறம் இந்த ட்ரிப்பை சிறப்பாக என்ஜாய் செய்யும் இனியா மற்றும் செல்வி அடுத்தடுத்து வித்தியாசமாக பல நிகழ்வுகளை கண்டு வருகின்றனர். இதனிடையே சமீபத்தில் ஈஸ்வரியை காட்டி தொலைத்துவிட்டு பரிதவித்தாலும், நிதானமாக செயல்பட்ட பாக்யா உடனடியாக தனது மாமியாரை தேடி கண்டுபிடித்து நல்ல பெயர் வாங்கிவிடுகிறார். அதே சமயம் கோபி போன் செய்யும்போது ஈஸ்வரி தன்னை பார்த்தக்கொள்ள பாக்யா இருக்கிறார் என்று கூறி கோபிக்கு நோஸ்கட் செய்கிறார்.
தற்போது பயணத்தை முடித்துக்கொண்டு அனைவரும் வீடு திரும்ப ரெடியாகி வரும் நிலையில், கோபி பாக்யாவுக்கு போன் செய்து தனது மகள் மற்றும் அம்மாவை பாத்திரமாக அழைத்து வரும்படி எச்சரிக்கிறார். கோபிக்கு பாக்யா பதிலடி கொடுத்தாலும், நிதானமாக காரை ஓட்டி வரும்போது ஒரு வயனதாவர் சைக்கிளில் குறுக்கே வந்து விழுந்து விடுகிறார். அவருக்கு லேசான அடிதான் என்றாலும் கூட அப்படி மக்கள் சூழ்ந்துவிடுக்னறனர்.
இதனையடுத்து போலீசாருக்கு தங்கள் தெரியவர உடனடியாக காவல்துறையினர் வந்து பாக்யாவிடம் லைசன்ஸ் கேட்கின்றனர். பாக்யா ஹோட்டலில் இருக்கும்போதே பர்ஸ்சை தொலைத்துவிட்டதால் லைசன்சும் அதனுடனே காணாமல்போய்விடுகிறது. இதனால் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரிக்க முடிவு செய்கின்றனர். அந்த நேரத்தில் பாக்கியாவிற்கு கால் செய்யும் பழனிச்சாமி, வீட்டிலுள்ளவர்களிடம் பேசி, வீட்டில் இருக்கும் லைசென்சை கேட்டு வாங்குமாறு சொல்கிறார்.
இதை கேட்டு நிம்மதியடையும் பாக்யா, தனது மாமனாருக்கு போன் செய்ய அங்கே கோபி இருந்து இந்த சம்பவத்தை தெரிந்துகொள்வது போல் எபிசோடு செல்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“