Tamil Serial Baakiyalakshmi Episode Update : ஆபீஸ்க்கு சாப்பாடு கொண்டு வரும் பாக்யாவை பார்த்து அதிர்ச்சியடையும் கோபி, பாக்யாவிடம் கோபமான ரெண்டு பேரும் எதுக்காக இங்க வந்தீங்க என கேட்க, நம்ம ஆபிஸ்ன்னு தெரியாதுங்க. லோகேஷன் அனுப்புனாங்க. நாங்க கிளம்பி வந்துட்டோம் என பாக்யா சொல்கிறாள். காலைலயே சாப்பாடு எடுத்துட்டு போனீங்கள்ள. அப்புறம் எதுக்காக இப்போ சாப்பாடு ஆர்டர் பண்ணி இருக்கீங்க என பாக்யா கேட்க, அவசரமாக ஒரு கஸ்டமர் வந்து இருக்காங்க. அதுக்காக தான் ஆர்டர் பண்ணேன் என சொல்லி கோபி சமாளிக்கிறான்
அதன்பிறகு பாக்யாவுக்கு ஐஸ் வைக்கும் கோபி, ஏன் இந்த காலோட இங்க வந்த. உன்னை பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு என எனக்கு சொல்கிறான். அப்போது டவர் இல்லாமல் வெளியில் வரும் பாக்யாவை கோபி தடுக்கிறான். அப்போது பாக்யா கோபியின் ரூமை பார்க்க வேண்டும் என சொல்ல, உள்ளே ஒரு முக்கியமான கஸ்டமர் இருப்பதாக சொல்லிவிடுகிறான். அதன்பின்னர் அவர்களை பேசி ஆபிஸில் இருந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கிறான்.
அதன்பிறகு பாக்யா கொண்டு வரும் சாப்பாட்டை சாப்பிடும் ராதிகா டீச்சர் புட் மாதிரி இருக்கு என்று சொல்கிறாள். மேலும் உங்களுக்கும் வேணும்னா டீச்சர் கிட்ட சொல்லி சாப்பாடு சொடுக்க சொல்லவா என்று கேட்க, கோபி அதெல்லாம் வேண்டாம் ராதிகா என்று சொல்லி சமாளிக்கிறான். இதன்பிறகு வீட்டிற்கு வரும் பாக்யா, கோபி ஆபிஸுக்கு சாப்பாடு கொடுத்த்து பற்றி சந்தோஷப்படுகிறாள். அதை பார்க்கும் எழில், இதுக்கு எதுக்கும்மா இவ்வளவு சந்தோஷப்படுற என கேட்க வேணும்னே நம்பர் கொடுத்து போன் பண்ண சொல்லி இருக்கார் போல. ஆபிஸ்ல இருக்குறவங்க எல்லாருக்கும் தெரிய வைக்கனும்னு தான் இதெல்லாம் பண்ணிருக்காரு போல என சொல்கிறாள்
அப்போது ஈஸ்வரி, ரொம்ப சந்தோஷப்படாதா? அப்புறம் போன் போட்டு சாப்பாடு நல்லா இல்லன்னு சொல்லிட போறான் என சொல்கிறாள். அதன்பின்னர் இரவு அனைவரும் அமர்ந்து சாப்பிடும்போது ஈஸ்வரி கோபியிடம் நீ இவ சாப்பாடு வேணும் தான் கேட்டு ஆர்டர் பண்ணியா என கேட்க, அதற்கு கோபி, எனக்கே தெரியாதுமா. வந்த பிறகு தான் அது பாக்யான்னே தெரியும் என சொல்கிறாள்.
அதன்பின்னர் செழியன், கோபியிடம் ஜெனி வேலைக்கு செல்ல போவது குறித்து கூறுகிறான். அதை கேட்டு சந்தோஷப்படும் கோபி, நல்ல முடிவு என சொல்கிறான். அதன்பிறகு ஜெனிக்கு அனைவரும் வாழ்த்துக்கள் சொல்ல இன்றைய எபிசோடு முடிவுக்கு வருகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil