Baakiyalakshmi Serial Episode Update: குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து செழியனும் ஜெனியும் பேசிக்கொள்கின்றனர். அப்போது இப்போ குழந்தை நமக்கு தேவையா? எனக்கு ரொம்ப பயமா இருக்கு என்று செழியன் சொல்ல, இன்னும் நீ குழந்தை வேணுமான்னு யோசிக்கிறீயா என ஜெனி சொல்கிறாள். அப்போது செழியன், இது ரொம்ப பெரிய கமிட்மெண்ட். நம்ம ரெண்டு பேருமே மெண்டலி இதுக்கு ரெடியாகவே இல்லை என சொல்கிறான். அதன்பிறகு இருவரும் பேசி 2 நாட்களில் முடிவு செய்வோம் என்று சொல்கிறான்.
இதனையத்து மறுநாள் தூங்கி எழுந்து வரும் ஜெனியிடம் பாசமாக பேசும் ஈஸ்வரி கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் எப்படி இருக்கணும் என்பதை பற்றி எல்லாம் சொல்கிறாள். அப்போது குழந்தையை சர்ச்சுக்கு எல்லாம் கூட்டிட்டு போவியா என ஈஸ்வரி கேட்கிறாள். அதற்கு சத்தியமூர்த்தி, இப்போ எதுக்கு இதெல்லாம். குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் இதெல்லாம் பேசிக்கலாம் என்கிறான். அதற்கு ஈஸ்வரி கேட்கனும்னு தோனுச்சி கேட்டேன் என்று சொல்லி விடுகிறாள்.
இதனைத்தொடர்ந்து செழியன், ஜெனி இருவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லும் கோபி ஜெனியிடம் நலம் விசாரிக்கிறான். அப்போது அவள் ஆபிஸ் போக வேண்டாம் என்று பாக்யா சொல்கிறாள். இதை கேட்டு டென்ஷன் ஆகும் செழியன், அது எப்படிம்மா வேலைக்கு சேர்ந்த உடனே லீவ் எடுக்க முடியாதுமா அவ ஆபிஸ் போகட்டும் என சொல்கிறான். அதற்கு ஜெனியும் சரி சொல்ல பாக்யா சோகமாகிறாள்.
அவர்கள் இருவரும் சென்றபிறகு பாக்யாவிடம் தனியாக பேசும் கோபி, அவளிடம் செழியனுக்கு குழந்தை பிறந்த நான் தாத்தா ஆகிருவேனா. என்று கேட்க பாக்யா அதை கேட்டு சிரிக்கிறாள். அப்போது கோபி, இந்த வயசுலையே நான் எப்படி தாத்தா ஆகுறது என கேட்கிறான். அதை கேட்டு பாக்யா எது நடந்தாலும் நீங்க தாத்தா தான் என்று சொல்கிறாள். அதை கேட்டு கோபி புலம்புகிறான். இதனிடையே பாக்யா ஒரு வீட்டுக்கு உணவு டெலிவரி கொடுக்க செல்லும் போது, அவளை உள்ளே அழைக்கிறார்கள்.
தயங்கியபடி உள்ளே செல்லும் பாக்யாவை வீட்டின் உரிமையாளர் சாப்பாடு சூப்பராக இருப்பதாக சொல்லி வாழ்த்துகிறார். அவருடைய கணவர் பாக்யா சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு, அம்மா கை பக்குவம் போல் இருப்பதாக கூறினார் என்றும் சொல்கிறாள். இதை கேட்டு பாக்யா மகிழ்ச்சியடைகிறாள். அப்போது பாக்யா பற்றி செல்வி பில்டப் கொடுக்கிறார். அதன்பின்னர் வெளியே வரும் பாக்யா செல்வியிடம் எதுக்கு இவ்யோ பில்டப் என்று கேட்க இதுதான் அக்கா மார்கெட்டிங் என்று சொல்கிறாள். அதன்பின்னர் வாடிக்கையாளர் பாராட்டியது குறித்து பாக்யா நெகிழ்ச்சியடைகிறாள் இத்துடன் முடிகிறது இன்றைய எபிசோடு
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil