/indian-express-tamil/media/media_files/DQ0zWivYLbdcU9YGiUu4.jpg)
பாக்கியலட்சுமி சீரியல்
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், அடுத்து வரும் எபிசோடுகளில் ஜெனியை பார்க்க சென்ற செழியனை அவளது அப்பா அடித்து தெருவில் தள்ளும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில், சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இதில் கடந்த வாரத்தில் பாக்யா புதிய ரெஸ்டாரண்டை, அமைச்சர் திறக்க இருந்தார். ஆனால் பாக்யலட்சுமி சீரியலில், பாக்யாவின் வளர்ச்சி பிடிக்காத கோபி, அமைச்சரின் உதவியாளரை வைத்து பாக்யா ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு அமைச்சர் வரமுடியாதபடி செய்துவிட முயற்சி செய்தார்.
அவனது முயற்சி பலிக்காமல், பாக்யா எதிர்பார்தது போல்,அமைச்சர் வந்து ரெஸ்டாரண்டடை திறந்து வைத்துவிட்டார்,இதனால் கோபி நோஸ்கட் ஆகிய நிலையில்,ரெஸ்டாரண்ட் திறப்பு விழாவுக்கு போனதற்காக ராதிகாவிடமும் பலமாக வாங்கி கட்டிக்கொண்டார். அதே சமயம் பாக்யாவுக்கு தொல்லை கொடுக்க வேண்டும் என்பதற்காக ஈஸ்வரி கிச்சன்ஸ் என்ற புதிய ஹோட்டலை திறந்துள்ளார் கோபி. இதனால் பாக்யாவின் ரெஸ்டாரண்ட்க்கு மக்கள் வரவு குறைந்துள்ளது. இதனால் கோபி பெரிய மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்.
இதனிடையே பாக்கியலட்சுமி சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் ஜெனியின் அப்பா ஜோசப் கோபியிடம் ஜெனிக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சு, விவாகரத்து கிடைத்தவுடன் அடுத்த நாளே மகளுக்கு திருமணம் என்று சொல்ல, அதை கேட்டு கோபி வீட்டுக்கு வந்து சொல்லிவிடுகிறார். இதை கேட்ட செழியன் உடனடியாக பைக் எடுத்துக்கொண்டு ஜோசப் வீட்டுக்கு சென்று, ஜெனி என் குழந்தை எனக்கு வேண்டும் என்று சொல்ல, ஜோசப் அவனை அடித்து வெளியில் துரத்துகிறார்.
ஆனாலும் செழியன் விடாமல் எனக்கு ஜெனி குழந்தை வேண்டும் என்று சொல்ல, ஜோசப் அவனை கழுத்தை பிடித்து வெளியில் தள்ளி கதவை சாத்திவிடுகிறார். இதை கதவுக்கு அருகில் ஜெனி எனக்கு வேண்டும் என்று சொல்ல அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. இந்த ப்ரமோ வைரலாகி வரும் நிலையில், அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.