Advertisment

புது காதல் உதயம்... கோபிக்கு ஷாக் கொடுத்த ராதிகா : இனி என்னலாம் நடக்க போகுதோ!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில் நடந்தது என்ன?

author-image
WebDesk
New Update
Baakiyalakshmi

பாக்கியலட்சுமி சீரியல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில் பாக்யா தனது மகன்களின் பிரச்சனையை தீர்த்து வைத்துவிட்டதால் விரைவில் சீரியல் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்களுக்கு தற்போது அடுத்த அதிர்ச்சியாக ஒரு புதிய லவ் ட்ராக் ஆரம்பமாகியுள்ளது.

Advertisment

பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில், தொடக்கத்தில் கோபியின் ரெஸ்டாரண்ட்க்கு வரும் ராதிகா, கோபியிடம் விசாரிக்கிறார். கணக்கு வழக்குகளை பார்த்துக் கொண்டிருக்கும் கோபி, எல்லாம் சரியான நேரத்திற்கு டெலிவரி கொடுத்தாச்சு என்று சொல்கிறார்.

இதை கேட்ட ராதிகா கேஷ்யூவலாக இருக்க, ராதிகா தன்னை பாராட்டவில்லை என்று கோபி கோபித்துக்கொள்ள, நீங்கள் என்ன சின்னப்பிள்ளையா? ஒரு சின்ன வேலையை முடித்ததற்கு பாராட்டு கேக்குறீங்க என்று சொல்லும் ராதிகா, கோபியை திட்டுகிறாள். அதன்பிறகு எம்ப்ளாய்கிட்ட ஸ்ரிக்ட்டா நடந்துக்கணும்னு சொன்னல, இப்போ பார் என்று சொல்லிவிட்டு செஃப்பை அழைத்து, இனிமேல் சொல்லாமல் லீவு போட கூடாது, எந்த அவசமாக இருந்தாலும் சொல்லிட்டு தான் லீவு எடுக்கனும்.

அதை விட்டுவிட்டு உன் இஷ்டத்திற்கு லீவு எடுத்தால் உன்னை டிஸ்மிஸ் பண்ணவும் தயங்கமாட்டேன் என்று எச்சரிக்கை கொடுக்க, ராதிகா போதும் போதும் என்று செஃப்பை உள்ளே அனுப்பி வைக்கிறார். ஸ்ரிக்டா இருங்கனு சொன்ன, அவரை ஒரேடியா ஓட வச்சிடுவீங்க போல என்று சொல்லி திட்ட, இப்படி பண்ணாலும் தப்பு, அப்படி பண்ணாலும் தப்பு நான் என்ன தான் பண்ண முடியும் என்று கோபி புலம்பிக்கொண்டிருக்கிறான். அடுத்து பாக்யா தனது ரெஸ்டாரண்ட்க்கு வருகிறார்.

அமிர்தா மற்றும் செல்வியை அழைத்து பழனிச்சாமியின் அம்மா என்னை பேச அழைத்தார் என்று சொல்ல, அண்ணன் உன்கிட்ட பேச வெக்கப்பட்டுகிட்டு அவங்க அம்மாகிட்ட சொல்லி பேச சொன்னாரா என்று கேட்க, நாளைக்கு பழனிச்சாமி சாருக்கு பிறந்த நாள். அதற்கு சமையல் ஆர்டர் கொடுத்தங்க என்று பாக்யா சொல்ல, இவ்வளவு தானா என்று செல்வி சொல்கிறாள். அதன்பிறகு பாக்யா நாளைக்கு என்ன சமைப்பது என்று யோசித்து யோசித்து சிரித்துக்கொண்டே லிஸ்ட் போட்டக்கொண்டு இருக்கிறார்.

இதை பார்த்த செல்வி, அக்காவிடம் நட்பை தாண்டி ஏதோ ஒன்று இருக்கு இருக்கு என்று சொல்ல, அப்படி எதாவது இருந்தால் சந்தோஷம் தான் என்று அமிர்தா சொல்கிறாள். ஆனால் அதை அவரு சொல்லட்டும் நாம கேட்க கூடாது என்றும் சொல்லிவிடுகிறாள். அதன்பிறகு செழியன் 7 மணிக்கு வருவதாக சொன்னதை நினைத்து ஜெனி அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருக்கிறாள். அப்போது கேட் திறக்கும் சத்தம் கேட்க, ஜெனி ஓடி வந்து பார்க்கிறாள். அங்கு பாக்யாவும் அமிர்தாவும் வருகின்றனர்.

அதன்பிறகு 8 மணிக்கு செழியன் வீட்டுக்கு வர, ஜெனி கோபித்துக்கொண்டு உள்ளே சென்றுவிடுகிறாள். லேட் ஆச்சுனா ஜெனிக்கு போன் பண்ணி சொல்லு என்று சொல்லும் பாக்யா அவளை சமாதாப்படுத்த செழியனை அனுப்பி வைக்கிறாள். அத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Baakiyalakshmi Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment