விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலில், தனது மகன்களை பிரச்சனையில் இருந்து காப்பாற்றிய பாக்யா மீது பழனிச்சாமிக்கு காதல் மலர்ந்துள்ளதால், இனி வரும் எபிசோடுகளில் இது தொடர்பான காட்சிகள் தான் கதையை கொண்டு செல்லும் என்று ரசிகர்கள் உறுதியாக கூறி வருகின்றனர்.
Advertisment
விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த சீரியலின் தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அடுத்த வாரத்திற்கான ப்ரமோ தற்போது வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருவதோடு மட்டுமல்லாமல் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது என்று சொல்லலாம்.
பாக்யாவின் கணவர் கோபி 2-வது திருமணம் செய்துகொண்ட நிலையில், மூத்த மகன் செழியன், ஜெனியை விட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் பழகியது பெரிய பிரச்சனையாக வெடித்தது. அதேபோல் எழில் மனைவி அமிர்தாவின் முதல் கணவன் உயிருடன் வந்து பிரச்சனை செய்து ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் பாக்யா சாமார்த்தியமாக தீர்த்து வைத்து மகன்களின் வாழ்க்கையை காப்பாற்றியுள்ளார்.
இப்போது பாக்யாவுக்கு போட்டியாக கோபி ரெஸ்டாரண்ட் திறந்ததும், அவருக்கே பாக்யா உணவு சப்ளை செய்து வென்றுவிட்டதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. அதனை மேலும் அதிகரிக்கும் வகையில் ஏப்ரல் 9-13 நாளுக்கான ப்ரமோ வெளியாகியுள்ளது. இதில் பழனிச்சாமி பிறந்த நாள் விழா நடக்கிறது. அப்போது அவரை நீங்கள் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை. எப்படிப்பட்ட பெண் உங்களுக்கு வேண்டும் என்று கேள்வி கேட்கின்றனர்.
Advertisment
Advertisements
இதற்கு பழனிச்சாமி, எனக்கு என்ன பிடிக்கும்னு நான் சொல்லாமலே அவருக்கு தெரிந்திருக்க வேண்டும் என்று சொல்ல, உடனே பாக்யா உங்களுக்கு பிடித்தது என்று ஒரு உணவை தருகிறார். அதன்பிறகு என் அம்மாவை அவரது அம்மாவாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்ல, பாக்யா பழனிச்சாமியின் அம்மாவை பாக்யா பாசத்துடன் அழைத்துச்செல்கிறார். அதன்பிறகு தனது தங்கைகளை அவரது தனது தங்கைகளாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்று பழனிச்சாமி சொல்கிறார்.
அப்போது பாக்யா, பழனிச்சாமியின் தங்கையிடம் பாசமாக நடந்துகொள்கிறார். இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருக்கும் பழனிச்சாமி பாக்யா மீது காதல் பார்வையில் பார்க்கிறார் அத்துடன் ப்ரமோ முடிவடைகிறது. பாக்யா விவாகரத்து பெற்று ஸ்போக்கன் இங்கிலீஷ் க்ளாஸ் போனபோது பழனிச்சாமியின் அறிமுகம் இவற்றை வைத்து பார்க்கும்போது பாக்யாவின் 2-வது கணவர் பழனிச்சாமி தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர்.
அதற்கு ஏற்றார்போல் இருவரும் நெருங்கிய நட்பாக பழகிய நிலையில், தற்போது பழனிச்சாமிக்கு காதல் மலர்ந்துள்ளது. விரைவில் பாக்யாவுக்கு மலரும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், இதை பார்த்து ஈஸ்வரி மற்றும் கோபியின் ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்பது ரசிகர்களின் பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“