விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அதே சமயம் சமீபத்தில் தனது மகன்களின் அனைத்து பிரச்சனைகளையும் பாக்யா தீர்த்து வைத்துவிட்ட நிலையில், அடுத்தாக சீரியல் முடிவை நோக்கி நகரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
தற்போது இந்த சீரியல் முடிவுக்கு வருவது போன்று தெரியவில்லை என்றாலும் இன்னும் சில வருடங்கள் நகர்த்தலாம் என்று சொல்லும் அளவுக்கு இயக்குனர் பெரிய ட்விஸ்டை கதையில் வைத்துள்ளார். தனது பேரன் எழில் அப்பா ஆக வேண்டும் என்று ஈஸ்வரி ஆசைப்பட மாறாக பேத்தி எடுத்துவிட்ட கோபி அப்பாவாக மாறுவது போல் கதை மாறியுள்ளது. இடையில் பாக்யா – பழனி காதல் காட்சிகள் வேறு.
பேத்தி எடுத்துவிட்ட கோபி, இந்த விஷயத்தை எப்படி அம்மா அப்பாவிடம் சொல்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருப்பதால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில்,ராதிகா தனது கர்ப்பத்தை தனது அம்மாவிடம் வெட்கப்பட்டுக்கொண்டே சொல்லிவிட்டார். இதை கேட்ட அவரது அம்மாவும் இந்த நேரத்தில் குழந்தை மிகவும் அவசியம் தான் என்று தைரியம் சொல்ல, தனது குடும்பத்தின் பக்கம் இருக்கும் கோபியை உன் பக்கம் இழக்க குழந்தை வேண்டும் என்று சொல்கிறார்.
அம்மாவின் சொல்லை கேட்டு ராதிகாவும் சரி என்று முடிவு செய்துவிட்ட நிலையில், ராதிகா கர்ப்பம் என்பதை எப்படி சொல்வது தனது அம்மா அப்பாவிடம் கோபி மறைக்கிறார். ராதிகாவும் இது குறித்து எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறார். மறுப்பக்கம் பாக்யாவின் ரெஸ்டாரண்ட்க்கு வரும் பழனிச்சாமி அவருக்கு புத்தகத்தை பரிசாக கொடுக்கிறார். மகிழ்ச்சியுடன் புத்தகத்தை வாங்கிக்கொள்ளும் பாக்யா அதை திறந்து பார்க்க முன்னேற்றத்திற்காக வழிகாட்டியாக உள்ளது
அதன்பிறகு புத்தகத்திற்காக பணத்தை பாக்யா பழனிச்சாமியிடம் கொடுக்க, அவர் அன்புக்கு விலை பேசாலாமா என்று கேட்கிறார். தனது பிறந்த நாளுக்கு சமைத்த பாக்யா பணம் வாங்காததற்கு சொன்ன வார்த்தையை அப்படியே பழனிச்சாமி ரிப்பீட் செய்கிறார். இதனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“