விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தினசரி எபிசோடுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்றைய எபிசோட்டில் பாக்யா கோபியை கத்தியை காட்டி மிரட்டுகிறார்.
இன்றைய எபிசொட்டில் ராதிகாவின் கர்ப்பம் குறித்து தெரிந்துகொண்ட பாக்யா பழையதை எல்லாம் நினைத்துப்பார்க்கிறார். இதற்கிடையே சமையலைறயில் எதோ செய்துகொண்டிருக்கும்போது அங்கு வரும் கோபி, தண்ணிர் குடித்துவிட்டு, எதையோ தேடிக்கொண்டிருக்க, அவன் மீது பாக்யா முறைத்தபடியே இருக்கிறார். பாக்யாவை பார்த்து பயப்படும் கோபி மீண்டும் தனது தேடுதலை தொடங்குகிறான்.
ஒரு கட்டத்தில் பாக்யாவிடமே கேட்க, அதையெல்லாம் பாக்கிறது தான் என் வேலையா என்று கேட்கிறாள். என்ன இப்படி பேசுறாளே என்று யோசிக்கும் கோபி, தள்ளு நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்ல, கையில் கத்தியுடன் இருக்கும் பாக்யா, இன்னும் 10 நிமிஷத்தில் வேலை முடிந்துவிடும். அதன்பிறகு வந்து தேடிக்கொள்ளுங்கள். இப்போ இங்கிருந்து கிளம்புங்க என்று கத்தியை சுழற்றுகிறாள்.
இதனால் பயந்துபோன கோபி, பேச்சு பேச்சாத்தான் இருக்கனும் எதுக்கு கத்தி எடுக்குற என்று கேட்டுவிட்டு, அங்கிருந்து சென்றுவிடுகிறான். அதன்பிறகு வேட்டி சட்டையில் இருந்து மாறி ஜீன்ஸ் டீசர்ட்டுன் பாக்யாவை பார்க்க புறப்படுகிறான் பழனிச்சாமி. இவனை பார்த்து அவனது அம்மா மகிழ்ச்சியாக வழியனுப்பி வைக்க, இந்த மாற்றத்தை பார்த்து பாக்யா என்ன சொல்லப்போகிறாரோ என்று நினைத்துக்கொண்டே வருகிறார்.
காரில் வந்து இறங்கியதும், பழனிச்சாமியை பார்க்கும் செல்வி அமிர்தா இருவரும், மாற்றத்தை புகழ்ந்து பேசுகின்றனர். அதன்பிறகு பழனி பாக்யாவிடம் செல்ல, அவளோ, ராதிகா கர்ப்பம் குறித்து நினைத்துக்கொண்டு பழனிச்சாமியிடம் சரியாக பேசவில்லை. மாற்றத்தை பற்றியும் எதையும் சொல்லததால் ஏமாற்றத்துடன் பழனி அங்கிருந்து சென்றுவிட, அப்போது பாக்யாவிடம் வரும் செல்வி பழனிச்சாமி அண்ணனை பார்த்தாயா என்று கேட்கிறாள்.
இப்போதான் பேசிட்டு போகிறார் என்று சொல்ல, அவர் ட்ரெஸை பார்த்தியா என்று கேடக், பாக்யா இல்லை என்று சொல்ல, செல்வி மீண்டும் மீண்டும் அதே கேள்வியை கேட்கிறாள். இதனால் கடுப்பாகும் பாக்யா ஒருவர் வந்தால் அவர் முகத்தை பார்த்து பேசாமல் என்ன ட்ரெஸ் போட்டிருக்கிறார் என்பதை பார்ப்பது தான் என் வேலையா என்று கேட்கிறாள் இதனால் இன்றைய எபிசோடு பரபரப்பாக இருக்கிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“